சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த 5 சீரியல்கள்.. தட்டு தடுமாறி முதல் இடத்தை தக்க வைத்த சன் டிவி

Serial Trp Rating List: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் இன் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் அதிக புள்ளிகள் பெற்று முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

அன்னம்: அன்னம், கார்த்திக்கை கல்யாணம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால் கார்த்திக், ரம்யாவை காதலித்து வருகிறார். அதனால் இவர்களுக்குள் எப்படி கல்யாணம் நடக்கும், சண்முக வாத்தியார் என்ன பண்ணப் போகிறார் என்பது விறுவிறுப்பாக போய் கொண்டு இருக்கிறது. இதற்கு இடையில் சரவணன் மற்றும் அன்னம் கெமிஸ்ட்ரியும் வொர்க் அவுட் ஆகி வருவதால் திடீர் திருப்பங்கள் என்று கதைகள் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.75 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: பிரபு மற்றும் ஆதிரைக்கு கல்யாணம் ஆன பிறகும் தொடர்ந்து பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்து வரும் அளவிற்கு தான் கதை நகர்ந்து வருகிறது. அதிலும் ஆதிரையின் அம்மா சூழ்ச்சி பண்ணி அப்பா மற்றும் மகளுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தி விட்டார். இதனால் நொந்து போன ஆதிரையின் அப்பா, தேவாவிடம் இடத்தை கொடுத்து அந்த பணத்தை வாங்கி ஆதிரையின் சித்தி முகத்தில் எரிந்து பிரச்சனையை முடித்து விடலாம் என்று முடிவெடுத்து விட்டார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஆதிரை, இடத்தை கொடுக்க முடியாத அளவிற்கு நிறுத்திவிட்டார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.96 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

கயல்: எப்போதுதான் கயல் மற்றும் எழில் சந்தோசமாக இருப்பார்கள் என்று தெரியாத அளவிற்கு கதை பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறது. கயலுக்கு மட்டும் எங்க இருந்து தான் புதுசு புதுசாக பிரச்சனைகளும் வில்லன்களும் வருகிறார்கள் என்பது புரியாத புதிதாக தான் இருக்கிறது. அந்த வகையில் எழிலுக்கு பிடிக்காத ஒரு விஷயமாக வேலு, கயல் வீட்டிற்கு வந்து அட்டகாசம் பண்ணி வருகிறார். எழில் மனசை புரிந்து கொள்ளாத கயலும் வேலுவை நிராகரிக்காமல் இருக்கிறார். இதனால் அவ்வப்போது எழில் கடுப்பாகி வருகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.91 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: தல பொங்களை கொண்டாடுவதற்கு நந்தினியின் கிராமத்திற்கு சூர்யா போயிருக்கிறார். போன இடத்தில் சுந்தரவல்லி நந்தினிக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக சில சதிகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனாலும் கிராமத்துக்கு போன நந்தினிக்கு பழையபடி தைரியமும் துணிச்சலும் வந்து விட்டதால் எந்த பிரச்சினை வந்தாலும் அதை ஈசியாக சமாளித்து விடுகிறார். அத்துடன் சூர்யாவும் நந்தினியும் புரிந்து கொள்வதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டில் 10.25 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சிங்கப்பெண்ணை: அன்புவின் அம்மா லலிதாவுக்கு சுயநினைவு வந்து பழைய மாதிரி ஆக வேண்டும் என்பதால் ஆனந்தி பிரார்த்தனை செய்து லலிதாவின் பக்கத்திலிருந்து எல்லா பணிவிடைகளையும் பார்த்து வருகிறார். அந்த வகையில் லலிதா மறுபடியும் குணமாகி வீட்டுக்கு வந்த நிலையில் இந்த விஷயம் எதுவும் தெரியாத பட்சத்தில் ஆனந்தியை மறுபடியும் நோகடித்து பேச போகிறார். ஆனால் ஆஸ்பத்திரியில் இக்கட்டான சூழலில் இருக்கும் பொழுது மருத்துவர் கூட கைவிட்ட நிலையில் ஆனந்தி பண்ணின விஷயங்கள் தான் தன்னை காப்பாற்றி இருக்கிறது என்று புரிந்து கொண்ட லலிதா, ஆனந்தியை அன்புக்கு மனைவியாகவும் தனக்கு ஒரு மருமகளாகவும் ஏற்றுக் கொள்ளப் போகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 10.60 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

Trending News