ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

Rajini : சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 5 ஜோடிகளின் விவாகரத்து.. மோசமான தவறை நினைத்து இப்பவும் கண்கலங்கும் ரஜினி!

இப்போது சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்தி அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் நினைத்து கூட பார்க்க முடியாத சினிமா பிரபலங்களின் சமீபத்திய ஐந்து விவாகரத்து செய்திகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜிவி பிரகாஷ், சைந்தவி

பாடகர் மற்றும் நடிகருமான ஜிவி பிரகாஷ் சிறுவயதிலிருந்தே பாடகி
சைந்தவியை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் 11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரியப் போவதாக அறிவித்திருக்கின்றனர். இதற்கு காரணம் படங்களில் ஜிவி பிரகாஷ் நடிகை உடன் நெருக்கமாக நடித்தது சைந்தவிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகளின் விருப்பத்திற்காக சூப்பர் ஸ்டாரின் தனுஷை ஐஸ்வர்யாவுக்கு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர். தன் மகள் எடுத்த தவறான முடிவை நினைத்து இப்போதும் ரஜினி கண்கலங்குகிறார்.

பாலா, முத்துமலர்

இயக்குனர் பாலா மற்றும் முத்துமலர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதற்கு காரணம் ஒரு புறம் பாலாவின் கொடூரத்தனம் என்றும் மற்றொருபுறம் முத்துமலர் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இமான், மோனிகா ரிச்சர்ட்

இசையமைப்பாளர் இமான் தனது மனைவி மோனிகா ரிச்சர்டை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கான விவாரத்திற்கான காரணத்தில் சிவகார்த்திகேயன் பெயரும் சமீபத்தில் அடிபட்டது.

சமந்தா, நாக சைதன்யா

நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமந்தாவுக்கு நாகச் சைதன்யா உடன் பிரச்சனை இல்லை என்றாலும் அவரது குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவு காரணமாக பிரிந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News