புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கொடி கட்டி பறந்த 5 அக்கா, தங்கை நடிகைகள்.. நக்மாவை தூக்கி சாப்பிட்ட ஜோ

படங்களில் ஹீரோயினின் எதிர்பார்ப்பு என்பது அதிகம். அதிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா தங்கைகள் நடித்திருந்தால் அவை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து விடுகிறது.

பெரும்பாலும் தமிழ் சினிமாவில் அக்காவின் சிபாரிசு கொண்டே தங்கைகள் சான்ஸ் பெற்றிருப்பார்கள். அவ்வாறு கொடிகட்டி பறந்த 5 அக்கா தங்கை நடிகைகளை பற்றி இங்கு காண்போம்.

Also Read: உதவி கேட்டு சென்ற எம்ஆர் ராதாவுக்கு ஆரஞ்சு பழம் கொடுத்தனுப்பிய நடிகர்.. உண்மையான காரணத்தை சொன்ன ராதாரவி

அம்பிகா-ராதா: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் அம்பிகா. அதன் பின் பலமொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் தன் நடிப்பின் மூலம் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை உருவாக்கியவர். இவரை தொடர்ந்து அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் ராதா. இவர் தன்னுடைய எதார்த்த நடிப்பால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதன்பின் ஒரு காலகட்டத்தில் தன் அக்காவிற்கு போட்டியாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை அம்பிகா தன் சினிமா பயணத்தை தொடர்ந்து உள்ள நிலையில் ராதா நடிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.

ராதிகா-நிரோஷா: ராதிகா, பல திறமைகளை கொண்ட இவர் இன்று வரை தமிழ் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருகிறார். இவரின் எளிமையான நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்றாகும். இவரின் வளர்ச்சியை கண்டு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நிரோஷா. இவர் குறுகிய கால கட்டமே நடித்திருந்தாலும் தன் நடிப்பால் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்தவர். தற்பொழுது சினிமாவில் ஈடுபாடு செலுத்தாமல் இருக்கும் இவர் வாய்ப்பு இழந்து காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: துப்பாக்கியில் சுட்டதை நக்கலாக பதில் அளித்த எம்ஆர் ராதா.. 55 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட உண்மை

ஊர்வசி- கல்பனா: அன்றைய காலகட்டத்தில் கனவு கன்னியாக வலம் வந்தவர்தான் ஊர்வசி. இவரின் முக பாவனைக்கும் மற்றும் எளிமையான நடிப்பிற்கும் பல படவாய்ப்புகள் கிடைத்தது. மேலும் பல பிரபலங்களோடு நடித்த பெருமையை பெற்றவர். இவரின் அக்காவான கல்பனா மலையாளத்தில் பிரபலமான நடிகை ஆவார். இவர் நடித்த சின்ன வீடு, சசி லீலாவதி ஆகிய படங்களில் ரசிகர்களின் அன்பை பெற்றார். மேலும் அக்கா தங்கை ஆகிய இவர்கள் இருவருமே ஒரு காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்ரன்-மோனல்: இளசுகளின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் சிம்ரன். இவரின் ஆட்டத்திற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு என கூறலாம். அந்தளவுக்கு சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தவர். தற்போது ஒரு சில படங்களில் ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார். இவரின் சிபாரிசு மூலம் நடிக்க வந்தவர் தான் மோனல். இவரின் முதல் படமான பத்ரியில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். அதன்பின் இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். மேற்கொண்டு இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களை வேதனை உள்ளாக்கியது.

Also Read: ஜிம்மில் தலைகீழாக தொங்கி குறளி வித்தை காட்டும் ஜோதிகாவின் புகைப்படம் .. சூர்யாவுக்கே டப் கொடுப்பாங்க போல

நக்மா-ஜோதிகா: 90ஸ்களில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் தான் நக்மா.அதன்பின் தமிழில் ரஜினியுடன் பாட்ஷா, பிரபுதேவா உடன் காதலன் ஆகிய படங்களில் நடித்த இவர் தற்பொழுது சினிமாவிற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார். இவரை தொடர்ந்து சினிமாவில் கால் பதித்தவர் தான் ஜோதிகா. இவர் நடித்த முதல் படமே இவருக்கு ரசிகர் கூட்டத்தை பெற்று தந்தது. அதன்பின் இன்று வரை தமிழ் சினிமாவில் தன் அர்ப்பணிப்பை கொடுத்து ரசிகர் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பிடித்து வருகிறார் ஜோதிகா.

Trending News