புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பெரிய பட்ஜெட் படங்களை சுக்குநூறாக உடைத்த 5 சின்ன படங்கள்.. முழு ஹீரோவாக ஜெயித்த சூரி

5 Small Films that broke big budget films: தற்போது முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் கதை எந்த அளவுக்கு இருக்கிறதோ இல்லையோ பட்ஜெட் அதிக அளவில் இருக்க வேண்டும் என்பது முக்கியமாகிவிட்டது. ஏனென்றால் பட்ஜெட்டை பொருத்துதான் வசூலும் டபுளாகும் என்பதினால். ஆனால் இதை தகர்த்தெறியும் வகையில் வளர்ந்து வரும் நடிகர்கள் சின்ன பட்ஜெட் படங்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்து விடுகிறார்கள். அப்படி கடந்த வருடம் பொற்காலமாக அமைந்த ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

விடுதலை: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் விடுதலை படம் வெளியானது. இப்படத்தில் நடிப்பதற்கு முன் காமெடி நடிகராக இருந்த சூரி இதில் முதன்முதலாக ஹீரோவாக நடித்தார். அப்படி நடித்த இந்த படம் மக்கள் ஹீரோவாக வரவேற்கும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பும் கதைக்கு ஏற்ற தத்ரூபமான விஷயங்களும் அமைந்து இருந்தது. அதனாலேயே மக்கள் இப்படத்திற்கு பெரிதும் வரவேற்பு கொடுத்தார்கள்.

பார்க்கிங்: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை ஹரிஸ்க்கும், எம்எஸ் பாஸ்கருக்கும் இடையே நடக்கும் வரட்டு கௌரவத்தால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி அழகாக விவரித்து காட்டப்பட்டிருக்கும். படம் பார்க்கிற இரண்டு மணி நேரம் எந்தவித எரிச்சலும் இல்லாமல் படம் பார்க்கும் திருப்தியை இப்படம் முழுமையாக கொடுத்திருக்கும்.

Also read: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.. நயன்தாராவுடன் மீண்டும் மோத வரும் பார்க்கிங்

கிடா: ரா. வெங்கட் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காளி வெங்கட் மற்றும் ராமு நடிப்பில் கிடா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்டையும் பாசத்தையும் வைத்து தாத்தா பேரனின் அன்பை வெளிப்படுத்தும் உணர்ச்சி பூர்வமாக கதை அமைந்திருக்கும். இப்படிப்பட்ட படம் சர்வதேச திரைப்படம் விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது.

இறுக்கப்பற்று: யுவராஜ் தயாளன் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் நடிப்பில் இறுகப்பற்று திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது காதலித்து கல்யாணம் செய்த தம்பதிகள் மற்றும் பெற்றோர்களால் பார்த்து திருமணம் செய்த தம்பதிகள் இருவருக்கும் வாழ்க்கையில் நடக்கும் இயல்பான விஷயங்களை காட்டும் விதமாக கதை அமைந்திருக்கும். அப்படிப்பட்ட இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுவிட்டது.

சித்தா: எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சித்தா திரைப்படம் வெளிவந்தது. இப்படம் குழந்தைகளுக்கு நடக்கும் வன்கொடுமையை எதிர்த்து காட்டும் விதமாக எந்தவித அலப்பரையும் காட்டாமல் கமுக்கமாக வந்து மக்கள் மனதில் நச்சென்று ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

Also read: கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க சித்தார்த்.. பில்டப் கொடுத்து சூடான தோசை கல்லில் உட்கார்ந்த 5 நடிகர்கள்

Trending News