வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆண்களை வசியப்படுத்தி பெண்கள் பாடிய 5 பாடல்கள்.. கூடு விட்டு கூடு பாய்ந்த அழகிய அசுரா

நம் மனதில் ஏற்படும் கவலைகளை மறக்கடிக்கும் சக்தி ஒன்றே ஒன்றுக்கு தான் உண்டு. அதுதான் பாடல்கள். அப்படிப்பட்ட பாடல்களை படத்திற்கு ஏற்றவாறு அமைத்தால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும்.

அதிலும் காதலர்கள் ஒருவருக்கொருவர் தன் பாசத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக அமையும் காதல் பாடல்கள் மக்களுக்கு மிகவும் பிடித்தவாறு அமைந்துவிடுகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களின் மீது கொண்ட காதலை வெளிக்காட்டும் விதமாக அமைந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அப்படிப்பட்ட ஐந்து பாடல்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

Also Read:முரட்டுத்தனமாய் மாறிய 5 சாக்லேட் ஹீரோக்கள்.. மாதவனை கொடூரனாய் மாற்றிய மணிரத்தினம்

ஒன்றாய் இரண்டாய் ஆசைகள் (காக்க காக்க): சூர்யாவின் காக்க காக்க படத்தில் இடம்பெறும் பாடலான ஒன்றா இரண்டாய் ஆசைகள் என்ற பாடலை கேட்காதவரே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சூர்யாவின் பார்வையால் ஈர்க்கப்பட்டு ஜோதிகா தன் ஆசையை வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைந்திருக்கும். கௌதம் இயக்கத்தில் வந்த இப்படம் வெற்றி பெற இப்பாடலும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். மேலும் இப்பாடலில் இவர்கள் இருவரின் நடிப்பு மக்களிடையே பெரிதளவு பேசப்பட்டது என்று தான் கூற வேண்டும்.

சினேகிதனே சினேகிதனே(அலைபாயுதே): 2000ல் நம் சாக்லேட் பாய் மாதவன் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த படம் தான் அலைபாயுதே. இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வரும் சினேகிதனே சினேகிதனே என்ற பாடல் சூப்பர் ஹிட் பாடல் ஆக அமைந்தது. மேலும் பெற்றோர்களின் எதிர்ப்பால் இருவரும் சேர்ந்து தனித்தே வாழும் காட்சிகள் காதலர்களை வெகுவாக ஈர்த்தது. இப்பாடலை முனுமுனுக்காத ஆட்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு நம் மனதில் நீங்காத இடம் பிடித்தது என்றே கூறலாம்.

Also Read:ரோலக்ஸ் கௌரவத் தோற்றத்தில் நடித்து வெளிவந்த 8 படங்கள்.. த்ரிஷாவுடன் குத்தாட்டம் போட்ட சூர்யா 

சொல்லத்தான் நினைக்கிறேன் (காதல் சுகமானது): புன்னகை அரசி என்று பெயர் பெற்ற சினேகா நடிப்பில் வெளிவந்த படம் தான் காதல் சுகமானது. இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களுமே மக்களை வெகுவாக கவர்ந்த பாடல்கள் என்று தான் கூற வேண்டும். அதிலும் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற பாடலில் வரும் வரிகள் மேலும் சிறப்பு கூட்டும் விதமாக பெயர் பெற்றிருக்கும். மற்றும் கேட்பவரின் மனதில் காதல் உணர்வை உண்டுப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைந்திருக்கும்.

அடை மழை வரும் (மின்னலே): ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளிவந்து காதலர்களின் வரவேற்பை பெற்ற பாடல் தான் வசீகரா. இப்பாடலில் இடம் பெற்றிருக்கும் வரிகள் காதல் ஆசை தூண்டும் விதமாகவே அமைந்திருக்கும். இப்பாடல் பட்டி தொட்டி எங்கும் மக்களை முணுமுணுக்க செய்தது. இப்படத்திற்கு இந்த பாடலே ஒரு ஹைலைட் ஆக அமைந்தது என்றுதான் கூற வேண்டும்.

Also Read:தவறான மருத்துவ பரிசோதனை.. அதிர்ச்சியில் பிக் பாஸ் ஷெரின் வெளியிட்ட தகவல்.!

அழகிய அசுரா (விசில்): திரில்லர் மூவியாக எடுக்கப்பட்ட விசில் படத்தில் இப்பாடல் இடம் பெற்றிருக்கும். இப்பாடலில் ஷெரின் அவர்கள் பாடலுக்கு ஏற்ற கவர்ச்சியை கொடுத்திருப்பார். இமானின் இசையமைப்பில் வந்த இந்தப் பாடல் மேலும் இப்படத்திற்கு மெருகேத்தும் விதமாக அமைந்தது. இந்த பாடல் பெண்களை விட ஆண்களை மிகவும் கவர்ந்தது என்று தான் கூற வேண்டும்.

Trending News