வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

அஜித்துக்காக எழுதப்பட்ட 5 கதைகள்.. முதல் கோணல் முற்றிலும் கோணலாய் முடிந்த பாலாவின் நட்பு

5 Stories written for Actor Ajith: ஒரு படத்தின் கதையை எழுதுவதற்கு முன்பே, ‘கதாநாயகன் அஜித் தான்’ என மனதில் வைத்துக்கொண்டு சில இயக்குனர்கள் ஸ்டோரி எழுதி இருக்கின்றனர். அப்படி அஜித்துக்காகவே எழுதப்பட்ட ஐந்து படங்களில் அவர் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. அந்தப் படங்கள் எவை என்பதை பார்ப்போம்.

ரன்: லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் தான் ரன். இந்த படத்தில் மாதவன் கேரக்டரில் அஜித் நடிக்க இருந்தார். இந்த ஸ்டோரி அஜித்துக்காகவே எழுதப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணத்தால் அவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் ஜாக்பாட் அடித்தது போல் ரன் பட வாய்ப்பை பெற்ற மாதவனுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்ததோடு, சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார்.

ஜெமினி: அஜித்தின் சினிமா கேரியரை தூக்கி விட்ட பெருமை இயக்குனர் சரணுக்கு உண்டு. அவர் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான காதல் மன்னன் படத்தில் மட்டுமல்லாமல் அமர்க்களம் படத்தையும் அஜித்தை வைத்து தான் எடுத்தார். அதன் பின் அஜித் சரணின் கூட்டணியில் ஏறுமுகம் படத்தில் நடித்தார்.

இந்த படத்தின் ஸ்டோரி அஜித்துக்காகவே எழுதப்பட்டது. 2001ல் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு, 40% படப்பிடிப்பு முடிந்து விட்டது. அந்த சமயத்தில் அஜித்துக்கு கதை பிடிக்காததால் படத்திலிருந்து விலகுவதாக சொல்லிவிட்டார். பின்பு சரண், அந்தக் கதையை தூக்கி போடாமல் சீயான் விக்ரமை வைத்து வேறொரு டைட்டிலில் எடுத்து ஹிட்டான படம் தான் ஜெமினி.

Also Read: துணிவு பட நடிகர் அகால மரணம்.. அடுத்தடுத்த சோகத்தால் பதறும் திரையுலகம்

அஜித்துக்காகவே உருவாக்கப்பட்ட 5 படங்கள்

நந்தா: இயக்குனர் பாலா அஜித்துக்காகவே எழுதிய கதைதான் நந்தா. இந்த படத்தின் கதையை அஜித்திடம் சொல்லி, கால்சீட் எல்லாம் வாங்கி விட்டார். அதன் பின்பு அஜித்தை வைத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் ரிலீஸ் ஆனது. ஆனால் பாலாவுடன் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அஜித் படத்தில் இருந்து விலகினார். அதன் பின்பு தான் அந்த வாய்ப்பு சூர்யாவிற்கு கிடைத்தது. நந்தா படத்தின் மூலம் தான் சூர்யா தன்னை ஒரு பக்கா மாஸ் ஹீரோ என்பதை காட்டினார்.

இந்த படத்தில் சூர்யா- பாலா இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அதன் பின் சூர்யாவிற்காகவே பிதாமகன் என்ற படத்தை பாலா எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார். இவர்களுடைய நட்பு ‘வணங்கான்’ படத்தில் நீடிக்கும் என நினைத்தனர். ஆனால் அந்தப் படத்தில் பாலா- சூர்யா இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு படத்திலிருந்து சூர்யா விலகி விட்டார். இப்போது வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து பாலா எடுத்து முடித்திருக்கிறார். பாலாவிற்கு நந்தா படத்தின் மூலம் அஜித்துடன் விரிசல் ஏற்பட்டது, இப்போது வணங்கான் படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைக்க முடியாத பிளவு ஏற்பட்டு விட்டது. இதைதான் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள்.

கஜினி: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த படம் தான் கஜினி. இந்த படத்தின் கதை அஜித்துக்காக உருவாக்கப்பட்டது. படத்தின் ஒன்லைன் ஸ்டோரியை கேட்டதும் அஜித்தும் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். ‘மிரட்டல் கஜினி’ என்ற டைட்டிலுடன் இதன் படப்பிடிப்பும் துவங்கப்பட்டது. ஆனா கஜினி கேரக்டருக்காக மொட்டை அடித்து சட்டை போடாமல் நடிக்கணும்னு ஏஆர் முருகதாஸ் சொன்னதும், ‘அது மாதிரி நடிக்க எனக்கு பிடிக்காது’ என்று படத்தில் இருந்து விலகி விட்டார்.

நான் கடவுள்: பாலா இயக்கத்தில் ஆர்யா அகோரியாக நடித்த ‘நான் கடவுள்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தான். எழுத்தாளர் ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை வெளிப்படையாக கொண்டு நான் கடவுள் படம் எடுக்கப்பட்டது. இதில் ருத்ரன் கேரக்டரை பாலா அஜித்தை மனதில் வைத்து தான் உருவாக்கினார். இந்த படத்தில் அஜித்தும் கமிட்டாகி படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துக்கும் பாலாவிற்கும் இடையே சண்டை வந்திருக்கிறது. பாலா அஜித்தை அடித்து விட்டதாகவும். அதை அடுத்து அந்த கூட்டணி முறிந்து விட்டதால், நான் கடவுள் பட வாய்ப்பு ஆர்யாவிற்கு சென்றது.

Also Read: பாலா இயக்கத்தில் நடித்ததால் தான் கேரியரே போச்சு.. டாக்டர் நடிகரோட அப்பா இப்ப வர போடும் சண்டை

- Advertisement -spot_img

Trending News