புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்த 5 சக்ஸஸ்ஃபுல் நடிகர்கள்.. பெயரை உடைத்து வெற்றி கண்ட ஜெயம் ரவி

FIVE SUCCESSFUL ACTORS : ஓரிரு ஹிட் படங்கள் கொடுத்து காணாமல் போகும் ஹீரோக்கள் மத்தியில் தொடர்ந்து மூன்று நான்கு படங்களில் நடித்து மக்களிடையே நீங்காத இடம் பிடித்த நடிகர்கள் சிலரே. அந்த வகையில் வரிசையாக சிறந்த படங்களை கொடுத்து ரசிகர்கள் கொண்டாடிய 5 நடிகர்கள்.

விக்ரம் : பாலாவின் சேது படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த விக்ரம், மக்களிடையே சியான் விக்ரமாக உருவெடுத்தார். 2001 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த தில் படத்தில் லைலா விவேக், ஆஷிஷ் வித்யார்த்தி, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். போலீஸ் ஆபீசராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஹீரோவின் கதை. இப்படத்தில் வித்யாசாகர் இசையும் சிறப்பாக அமைந்திருந்தது, படமும் சூப்பர் ஹிட் ஆனது. அதே ஆண்டில் வெளிவந்த காசி படத்தில் காவியா மாதவன், காவேரியுடன் நடித்திருப்பார் விக்ரம். கண் தெரியாத நாயகனாக அவர் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் படமாக அமைந்திருக்கும் இப்படமும் ஹீட் அடித்தது. ஜெமினி, இயக்குனர் சரண் இயக்கத்தில் விக்ரம், கிரண், மனோரமா நடித்திருந்தனர். பரத்வாஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட செய்தது. தொடர்ந்து மூன்று படங்களின் நடித்து அந்த சமயத்தில் நம்பர் ஒன் நடிகரானார் சியான் விக்ரம்.

Also Read : சம்பவத்திற்கு தயாரான விக்ரம், பா ரஞ்சித்.. கமலுக்கு கொடுக்கப் போகும் டஃப்

விக்ரம் பிரபு : திரை குடும்பத்தில் இருந்து வந்த வாரிசு நடிகர் என்றாலும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதில் வல்லவர் விக்ரம் பிரபு. முதல் படமான கும்கி படத்திலேயே லட்சுமி மேனன் மற்றும் மாணிக்கம், கொம்பன் யானைகளுடன் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் விக்ரம் பிரபு. அதே போல் இல்லாது அவரது இரண்டாவது படத்தில், இவன் வேற மாதிரி என்ற தலைப்புக்கு ஏற்ப முதல் படத்திலிருந்து அப்படியே மாறுபட்ட வேடத்தில் கலக்கியிருப்பார். அவரின் அடுத்த படமான அரிமா நம்பி என்ற ஆக்ஷ்ன் படத்தில் பிரியா ஆனந்துடன் நடித்திருப்பார். இப்படமும் விக்ரம் பிரபுவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

ஜெயம் ரவி : எடிட்டர் மோகனின் மகனான ரவி, ஜெயம் படத்தின் மூலம் அவரது சகோதரர் ராஜாவின் இயக்கத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் இயக்கத்தில் எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். ஆனால் அதன்பின் வந்த தாஸ், இதயத் திருடன்,மழை போன்ற படங்கள் ஓரளவே பெயர் பெற்றது. மீண்டும் ராஜாவின் இயக்கத்தில் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெனிலியா, பிரகாஷ்ராஜ் ஆகியோருடன் நடித்த சூப்பர் ஹிட் ஆனது அண்ணனின் ரீமேக் படங்களிலேயே மட்டும் நடிப்பார் என்ற ஒரு அவ பெயர் ரவிக்கு இருந்தது அப்போது. ஆனால் அதை உடைத்த ஜெயம் ரவி அடுத்த படமான தாம் தூம் என்ற படத்தில் இயக்குனர் ஜீவாவின் இயக்கத்தில் கங்கன ரகாவத், ஜெயராமுடன் நடித்திருப்பார். இந்த படம் புதுவிதமான திரைக்கதையில் அனைவரையும் கவர்ந்தது. பேராண்மை என்ற படத்தில் வடிவேலு, பொன்வண்ணன் ஆகியோருடன் ஜெயம் ரவி நடித்திருப்பார். NCC ஆபீஸராக 5 மாணவிகள் உதவியுடன் அன்னிய சக்திகள் காட்டுக்குள் ஊடுருவதை தடுத்து நிறுத்தி அவர்களை அழிப்பார். இந்த படமும் இவருக்கு சிறந்த ஹிட் படமாக அமைந்தது.

Also Read : 23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி.. வொர்க் அவுட் ஆகுமா இந்த கெமிஸ்ட்ரி

சத்யராஜ் : பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஏற்று நடித்து மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர் சத்யராஜ். கிட்டத்தட்ட 250 படங்களில் நடித்த சத்யராஜ் தொடர்ந்து ஹிட் கொடுத்த மூன்று படங்கள் இவை. பிரம்மா கே. சுபாஷ் இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பூ, கவுண்டமணி, பானுப்ரியா நடித்த படம். 100 நாட்கள் கடந்து வெற்றி பெற்ற இப்படத்தில் தனித்தன்மை உடைய ஓவியராக நடித்து கலக்கி இருப்பார். ரிக்ஷாமாமா, பி வாசு இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பூ, கௌதமி, கவுண்டமணி ஆகியோருடன் பேபி ஸ்ரீதேவியின் ரிக்ஷா மாமாவாக நடித்திருப்பார் சத்யராஜ். சூப்பர் ஹிட் ஆன இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். தெற்கு தெரு மச்சான், சத்யராஜ், பானுப்ரியா, கவுண்டமணி, பிரபாகரன் நடித்திருந்த படம் தெற்கு தெரு மச்சான். மணிவண்ணன் இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் நகரும் கதையில் சத்யராஜ் சிறப்பாக நடித்து படம் 100 நாட்கள் தாண்டி வெற்றி பெற்றது.

தனுஷ் : 2004 இல் இருந்து சில தோல்வி படங்களை கொடுத்த தனுஷ். 2007 இல் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தனது மார்க்கெட்டை மறுபடியும் பிடித்துக் கொண்டார். இதில் ரம்யா, டேனியல் பாலாஜி, கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நயன்தாரா, கருணாஸ் ரகுவரன் நடித்த படம் யாரடி நீ மோகினி. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரம்மியமாக அமைந்திருந்தது. செம ஹிட்டான இப்படத்திற்கு செல்வராகவன் கதை, திரைக்கதை அமைத்திருந்தார். படிக்காதவன் படம் தமன்னா, விவேக், சுமன் ஆகியோருடன் தனுஷ் நடிப்பில் உருவானது. சுராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயார்பில் வெற்றி பெற்ற இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்து இருந்தார்.

Also Read : இந்த பூனையும் பால் குடிக்குமா? 12 மணிக்கு நடிகைக்கு போன் செய்த தனுஷ்

Trending News