வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குழந்தை நட்சத்திரமாய் நடித்து ஜெயிக்க முடியாமல் போன 5 நட்சத்திரங்கள்.. இன்றுவரை போராடும் குட்டி பவானி

Child Artist to Heroes: சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய வெற்றியை பார்த்தவர்கள் தான் நடிகர் கமலஹாசன் மற்றும் நடிகை மீனா போன்றவர்கள். ஆனால் இவர்களுக்கு அடுத்து இந்த வரிசையில் பெரிய அளவில் வெற்றியை பார்த்தவர்கள் என்று சொல்லும் அளவுக்கு யாருமே இல்லை. சின்ன வயதில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஐந்து குழந்தை நட்சத்திரங்கள் இப்போது ஹீரோவாக வெற்றி பெற முடியாமல் போராடி வருகிறார்கள். அவர்கள் யார் என்று பார்க்கலாம்.

சாந்தனு பாக்யராஜ்: இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு குழந்தை நட்சத்திரமாக வேட்டிய மடிச்சு கட்டு படத்தில் நடித்திருப்பார். அந்த படத்திலேயே தன்னுடைய தனித்துவமான நடிப்பு, டான்ஸ் எல்லா விஷயத்திலும் மக்கள் மனதை கவர்ந்த இவர் இன்றுவரை வெற்றி படங்கள் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். பாவ கதைகள், ப்ளூ ஸ்டார் போன்ற படங்களில் தன்னை ஒரு நல்ல நடிகனாக இவர் நிரூபித்து இருந்தாலும் இன்று வரை அவரால் ஜொலிக்க முடியவில்லை.

மாஸ்டர் மகேந்திரன்: தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் மகேந்திரன். தமிழ்நாடு மாநில விருது, நந்தி விருது போன்றவற்றை சின்ன வயதிலேயே வாங்கியவர். இன்றுவரை மகேந்திரனை பார்க்கும் பொழுது நாட்டாமை படத்தில் பஞ்சாயத்து சீனில் “தாத்தா நான் பார்த்தேன்” என்ற டயலாக் அவர் பேசியதுதான் ஞாபகம் வரும். விழா என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மகேந்திரன் மாஸ்டர் படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார். மகேந்திரனுக்கு இன்று வரை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய ஹிட் படங்கள் எதுவும் இல்லை.

Also Read:பற்ற வைத்த தோழி, பத்ரகாளியான காதலி.. சாந்தனுவின் 8 வருட பிரேக் அப் சீக்ரெட்

கிருஷ்ணா: கழுகு படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் கிருஷ்ணா இயக்குனர் விஷ்ணுவரதனின் உடன்பிறந்த தம்பி. இவருடைய அப்பா ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளர். கிருஷ்ணா குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி, இருவர், தளபதி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோவாக இவர் ஒரு சில படங்களில் நடித்தாலும், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய படங்கள் எதுவும் இவருக்கு அமையவில்லை.

தருண்: இயக்குனர் மணிரத்தினத்தின் நாயகன், அக்னி நட்சத்திரம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் தருண் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அஞ்சலி படத்தில் ரகுவரன் மற்றும் ரேவதியின் மூத்த மகனாகவும் இவர் நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக நிறைய விருதுகளை பெற்ற இவர் தமிழில் காதல் சுகமானது மற்றும் புன்னகை தேசம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அது எதுவும் இவருக்கு கை கொடுக்கவில்லை.

சரண் சக்தி: நீதானே என் பொன்வசந்தம், ஜில்லா, கடல் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடித்த வடசென்னை படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து சாகா என்னும் படத்தில் ஹீரோவாக சரன் சக்தி நடித்தார். இருந்தாலும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

Also Read:மாஸ்டரில் வாங்கிய பல்பால் அடக்கி வாசிக்கும் சாந்தனு.. புருஷனுக்காக களத்தில் இறங்கிய பொண்டாட்டி

Trending News