வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

ஐந்துக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இசையமைத்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. சாதனை படைத்த சுயம்வரத்தில் இத்தனை பேரா 

More Than Five Music Composers Film: சினிமாவில் பெரும்பாலான படங்களில் ஒரே ஒரு இசையமைப்பாளர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள். ஏனென்றால் ஒருவரது கருத்து மற்றொருவரின் கருத்துடன் ஒத்துப் போகாது. ஆனால் சில படங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து படத்தின் பாடல்களை இசையமைத்துள்ளனர். அப்படிப்பட்ட 5 படங்களை பற்றி பார்ப்போம்.

காஞ்சனா 2: நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் எழுதி தயாரித்த படம் தான் காஞ்சனா. இந்தப் படத்தின் 2ம் பாகம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. திகில் நிறைந்த இந்த படத்திற்கு பின்னணி இசை கூடுதல் வலு சேர்த்தது. அதற்காக ராகவா லாரன்ஸ் படத்திற்கான இசையை நான்கு இசையமைப்பாளர்களை வைத்து தயார் செய்தார். காஞ்சனா 2 படத்தில் எஸ்.தமன், லியோன், ஜோன்ஸ், சி.சத்யா, அஸ்வமித்ரா போன்ற ஐந்து  இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.

Also Read: நெல்சனை சுற்றலில் விட்ட ரஜினிகாந்த்.. இதுவரை யாரும் பார்க்காத சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

டேவிட்: விக்ரம், பிரபு, ஜீவா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான  படம் தான் டேவிட். இந்தப் படம் வசூல் ரீதியாக சோடை போனாலும், இதில் இருக்கும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்திற்கு ரோயிங் பெர்னாண்டஸ், பிரம்ஃபதுரா, மைக்கி மெக்லேரி, மார்டன் மாஃபியா, மாதி பானி, அனிருத் உள்ளிட்ட ஏழு இசையமைப்பாளர்கள் இந்த படத்திற்கு இசையமைத்தனர். 

ஏய் நீ ரொம்ப அழகா இருக்க: சாம், சினேகா  நடிப்பில் வெளியான  காதல் இசை சார்ந்த திரைப்படம் தான் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’. இந்தப் படம் ரசிகர்களின் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் பட்டையைக் கிளப்பியது. இந்த படத்திற்கு 6 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். ராகவ்- ராஜா, ஸ்ரீநிவாஸ்,  ரமேஷ்- விநாயகம்,  முருகவேல், அரவிந்த்- சங்கர் உள்ளிட்டோர் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளனர்.  சபேஷ்- முரளி பின்னணி இசை அமைத்துள்ளார்.

Also Read: தாறுமாறாக உருவாகும் தளபதி 68 கதை.. விஜய்யின் அரசியலுக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் வெங்கட் பிரபு

சுயம்வரம்: பல திரைப்பட  இயக்குனர்களும் நடிகர்களும் நடித்து கின்னஸ் சாதனை படைத்த படம் தான் சுயம்வரம். இந்த படம் 23 மணி  58 நிமிடத்தில் படமாக்கப்பட்ட கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.  அப்படிப்பட்ட இந்த படத்தில் பலரும் ஆச்சரியப்படும் வகையில் இன்னொரு சுவாரசியமான விஷயமும் நடந்திருக்கிறது.

இந்தப் படத்தில் மொத்தம் 4 இசையமைப்பாளர்கள் பணி புரிந்திருக்கின்றனர்.  சிற்பி, தேவா, எஸ் ஏ ராஜ்குமார், வித்யாசாகர் உள்ளிட்ட நான்கு முன்னணி இசையமைப்பாளர்கள் சுயம்வரம் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Also Read: மொத்தத்தையும் கெடுத்து குழப்பிய அனிருத்.. ரஜினியிடம் வசமாய் சிக்கி விழி பிதுங்கிய நெல்சன்

கண்ணில் தெரியும் கதைகள்: 80களில் சரத்பாபு ஹீரோவாகவும், ஸ்ரீப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வசூல் ரீதியாக படு தோல்வியை சந்தித்த படம் தான் கண்ணில் தெரியும் கதைகள். இந்தப் படத்திற்கு 5 இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கேவி மகாதேவன், ஜிகே வெங்கடேஷ், சங்கர் கணேஷ், அகத்தியர், இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் 5 பேர் சேர்ந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News