புதன்கிழமை, ஜனவரி 1, 2025

கூட்டுக் குடும்பமாக விசு வெற்றிகண்ட 5 படங்கள்.. கைத்தட்டலை வாங்கிய ‘கம்முனு கிட’ கண்ணம்மாவின் வசனம்

விசுவின் இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலேயே அமைந்திருக்கும். அதிலும் குடும்ப செண்டிமெண்ட் கதைகளை மையமாக வைத்து ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருப்பார். அப்படியாக விசு-வின் இயக்கத்தில் வெற்றி கண்ட 5 சிறந்த படங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

வேடிக்கையின் வாடிக்கை: விசு இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேடிக்கை என் வாடிக்கை. இதில் எஸ்வி சேகர், பல்லவி, டெல்லி கணேஷ், மனோரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் விசு பொறுப்புள்ள தாய் மாமாவாக இருந்து தங்கையின் பிள்ளைகளுக்கு  எவ்வாறு திருமணத்தை நடத்தி வைக்கிறார் என்பதை மையமாக வைத்து இப்படமானதாக அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் காக்கி சட்டை கந்தசாமி என்னும் கதாபாத்திரத்தில் விசு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: தம்பியை விட்டு கொடுக்காத அண்ணன்.. விசு மற்றும் கிஷ்மு நடிப்பில் கலக்கிய 7 படங்கள்

சம்சாரம் து மின்சாரம்: எம் எஸ் குகன் தயாரிப்பில்1986 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சம்சாரம் அது மின்சாரம். இதில் விசு, ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தின் கதையானது கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி மிக அழகாக  எடுத்து சொல்லும் படமாக அமைந்திருந்தது. மேலும் படத்தில் சந்தேகப்பட்டதற்காக தீக்குளித்தது அந்த காலம் சந்தேகப்படுபவர்களை தீயில் தூக்கி போடுவது இந்த காலம் என்று மனோரமா பேசும் வசனங்கள் இன்றுவரையிலும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

நீங்க நல்லா இருக்கணும்: ஜி வெங்கடேஸ்வரன் தயாரிப்பில் விசு இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நீங்க நல்லா இருக்கணும். இதில் நிழல்கள் ரவி, பானுப்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும், மனோரமா, சந்திரசேகர் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் கதையானது மதுவினால் உண்டாகும் தீமைகளை சமுதாயத்திற்கு எடுத்துரைக்கும் சிறந்த சமூக கருத்துடைய படமாக இப்படம் அமைந்திருந்தது. அதிலும்  இந்தப் படமானது ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவே இருந்தது. 

Also Read: மிடில்கிளாஸ் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய விசுவின் 7 படங்கள்.. அதிலும் நம்ம கண்ணம்மா அல்டிமேட்!

மீண்டும் சாவித்திரி: பி. ராகி ரெட்டி தயாரிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மீண்டும் சாவித்திரி. இதில் விசு, ரேவதி, சரண்யா பொன்வண்ணன், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தின் கதை ஆனது நடுத்தர குடும்பத்திற்கு ஏற்படும் வரதட்சணை பிரச்சனையை மையமாக வைத்து இப்படத்தின் கதையானது அமைந்திருக்கும். மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிகாமணி ரமாமணி: ராஜ் கோ தயாரிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிகாமணி ரமாமணி. இதில் எஸ் வி சேகர், ஊர்வசி, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். அதிலும் இப்படத்தின் கதையானது நடுத்தர குடும்பத்தில் இருக்கும் ஒரு நபர் சந்தர்ப்ப சூழ்நிலையால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். பின்னர் வசதி படைத்த ஒருவரை சந்தித்த பிறகு எப்படி எல்லாம் அவரின் வாழ்க்கை மாற்றுகிறது என்பதை மையமாக வைத்து படத்தின் கதையானது அமைந்துள்ளது.

Also Read: 80-களில் சினிமாவை கலக்கிய 2 நட்சத்திரங்கள்.. மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்த விசு

Trending News