வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுட்டி பையனாக மாஸ் காட்டிய சிம்புவின் 5 படங்கள்.. பாடம் கற்றுத் தந்த வேலன், அப்பாவையே மிஞ்சிய STR

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி தற்பொழுது சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் சிம்பு. இவரின் திரை பயணமானது டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது வரை பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சிம்பு சுட்டிப்பையனாக மாஸ் காட்டிய ஐந்து படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

எங்க வீட்டு வேலன்: டி ராஜேந்தர் இயக்கிய, தயாரித்த திரைப்படம் எங்க வீட்டு வேலன். இதில் ராஜீவ், ரேகா, சிலம்பரசன், வி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிம்பு தனது தாயை  இழிவுபடுத்தும் தந்தைக்கு புத்திமதி சொல்லும் கதையினை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் வேலன் என்னும் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: பத்து தல படத்தில் நடிக்க இருந்த ரஜினி.. திடீர் என்ட்ரி கொடுத்த சிம்பு, காரணம் இதுதான்

சபாஷ் பாபு: சாய் மோகன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சபாஷ் பாபு. இதில் சிலம்பரசன், ஹீரா, டி ராஜேந்தர், சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிம்பு தாய் பாசத்தில் மூழ்கி தனது அம்மாவிற்காக எதையும் தாங்கும் ஒரு மகனாக பாபு என்னும் கேரக்டரில் நடித்து அசத்தி இருப்பார்.

பெற்றெடுத்த பிள்ளை: பூர்ண சந்திரன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பெற்றெடுத்த பிள்ளை. இதில் சரவணன், சித்ரா, ரோகிணி, பாண்டியன், சிலம்பரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் சிம்பு தனது வெகுளித்தனமான நடிப்பில் பிச்சு உதறி இருப்பார்.

Also Read: அஜித்துக்கு தீனா படம் எப்படியோ அப்படித்தான் சிம்புவுக்கும் பத்து தல.. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர்

தாய் தங்கை பாசம்: 1995 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் எழுதி, இயக்கி மற்றும் தயாரித்த திரைப்படம் தாய் தங்கை பாசம். இதில் டி ராஜேந்தர் உடன் சித்தாரா, எஸ் எஸ் சந்திரன், ஜெய்சங்கர், சிலம்பரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிலம்பரசன் பாசத்தில் அனைவரையும் உருக வைத்திருப்பார் என்றே சொல்லலாம்.

ஒரு தாயின் சபதம்: 1987 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு தாயின் சபதம். இதில் டி ராஜேந்தர் உடன் ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், நிழல்கள் ரவி, சிலம்பரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரம் ஆக நடித்து டி ராஜேந்திரகே டஃப் கொடுத்து இருப்பார்.

Also Read: பகிரங்கமாக கௌதம் மேனனிடம் கோரிக்கை வைத்த இளம் சீரியல் நடிகை.. சிம்புவையும் விட்டு வைக்கல

Trending News