திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அசுர வேகத்தில் தனுஷ் வளர காரணமாக இருந்த 5 வெற்றி படங்கள்.. சவுக்கடி கொடுத்த பொல்லாதவன்

சினிமாவை பொறுத்தவரை நடிப்பதற்கு அழகும், தோற்றமும் ரொம்ப முக்கியம் என்று இருந்த நிலையை மாற்றி அமைத்தவர்களில் ஒருவர் தனுஷ். இவர் ஆரம்பத்தில் நடிப்பதற்கு வந்த பொழுது இவரைப் பார்த்து இவர் எல்லாம் ஒரு நடிகரா என்று தோற்றத்தை வைத்துக்கொண்டு பலரும் கேலியும் கிண்டலும் செய்து வந்தார்கள்.

அத்துடன் பார்ப்பதற்கு ஒல்லியாக, சின்னப் பையன் போல் இருக்கிறார் என்று பலரும் நக்கல் அடித்தார்கள். அதனாலேயே இவரைத் தேடி எந்த வாய்ப்புகளையும் கொடுப்பதற்கு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் யாரும் தயாராக இல்லை. இவர் நடிப்பதற்கு லாயக்கே இல்லை என்று பலரும் இவரின் காது படவே விமர்சனங்களை அள்ளி குவித்திருக்கிறார்கள்.

Also read: தனுஷ் அதிரடியாய் கலக்கிய சமீபத்திய 6 படங்கள்.. சைக்கோவாய் மிரட்டிய நானே வருவேன்

அதே சமயத்தில் இவருடைய அப்பா கஸ்தூரிராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் குடும்ப சூழ்நிலையில் ரொம்பவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களின் முன்னேற்றத்திற்காக தனுசை சினிமாவில் இறக்கி விட்டால் கொஞ்சம் விடிவு காலம் பிறக்கும் என்று ஒரு சந்தேகத்துடன் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் யாருமே தனுசுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதன் பின் கஸ்தூரிராஜாவே இவரை வைத்து இயக்கி நடிக்க வைத்த முதல் படம் தான் துள்ளுவதோ இளமை. இப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு ஏறுமுகமாகவே அமைந்துவிட்டது. இதனை அடுத்து இவர் நடித்த படங்கள் மூலம் அசுர வேகத்தில் வளர்ந்து விட்டார்.

Also read: எக்ஸ் மாமனாருக்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ்.. உங்க ஆட்டத்துல இது புது ரகமாக இருக்கு மில்லர்

அந்த வகையில் இவர் நடித்த காதல் கொண்டேன் படத்தில் இவருடைய நடிப்பு, மற்றவர்களை வாய் அடைத்து பார்க்கும் அளவிற்கு ஒவ்வொரு ரியாக்சனும் வித்தியாசமாக கொடுத்து நடித்திருப்பார். அதன் பின் திருடா திருடி படத்தில் என்ன நளினம், அற்புதமான டான்ஸ் என்று மூக்கில் மேல் விரலை வைத்து பாராட்டி வந்தார்கள். அடுத்ததாக புதுப்பேட்டை இப்படம் நல்ல ஒரு திருப்புமுனையை கொடுத்த படமாக அமைந்தது.

அடுத்ததாக திருவிளையாடல் ஆரம்பம், இதில் சுட்டித்தனமான வேகம், விவேகம் என அனைத்தையும் முன்னிலைப்படுத்தி நடித்துக் காட்டியிருக்கிறார். மேலும் இவர் நடித்த பொல்லாதவன் படத்தில் இவருடைய நடிப்பின் மூலம் இவரை கிண்டல் பண்ணின அனைவருக்கும் சவுக்கடி கொடுத்திருப்பார். இப்படி இவர் தொடர்ந்து நடித்த படங்கள் மூலம் மக்கள் அனைவரும் இவரை ஏற்றுக் கொண்டதால் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Also read: சூப்பர் ஸ்டார் டைட்டிலை களவாடிய 10 படங்கள்.. மாமா தானே என உரிமையோடு 4 முறை சுட்ட தனுஷ்

Trending News