வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கௌதமி கமலுடன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. துணிச்சலுடன் சர்வ சாதாரணமாக நடித்த அந்தப் படம்

Gauthami Kamal Movies: கௌதமி பல மொழிகளில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். அத்துடன் இவருடைய நடிப்புக்கு மக்களிடத்தில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அப்படிப்பட்ட இவர் கமலுடன் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்திருக்கிறது. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

பாபநாசம்: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு பாபநாசம் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி, எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமல் மற்றும் கௌதமி, கணவன் மனைவிகளாக இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக குடும்பத்தை நடத்தி வருவார்கள். பின்பு எதிர்பாராத சூழ்நிலையில் ஒரு கொலை செய்து அதை மறைக்கும் விதமாக விறுவிறுப்பான கதையுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

Also read: மயில்சாமியை பார்க்க வராத இளம் நடிகர்கள்.. அதிலும் கமல்ஹாசன் இப்படி இருப்பது மிகவும் வருத்தமானது

தேவர்மகன்: இயக்குனர் பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு தேவர்மகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமல் மற்றும் கௌதமி ஒருவர் ஒருவர் காதலித்து ரொம்பவே நெருக்கமாக பழகி வருவார்கள். ஆனால் இவர்கள் சேராதபடி சூழ்நிலையில் கமல் ரேவதியை திருமணம் செய்து கொள்வார். இப்படத்தில் கௌதமி ஒரு வெகுளியான கேரக்டரை வெளிப்படுத்தி நடித்திருப்பார்.

நம்மவர்: கே.எஸ் சேது மாதவன் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு நம்மவர் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், கௌதமி, செந்தில், கோவை சரளா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை மாணவர்களின் அமைதியின்மை மற்றும் மோதல்கள் நிறைந்த கல்லூரியை சரிவர செய்து சீர்படுத்த வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்.

Also read: அழகில் கௌதமியை மிஞ்சிய மகள்.. ஸ்ருதிஹாசனை ஓரம் கட்டி அடுத்து உருவாகும் கதாநாயகி

அபூர்வ சகோதரர்கள்: சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், கௌதமி, ஜெய்சங்கர், நாகேஷ், மனோரமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ராஜு மற்றும் அப்பு இருவரும் சேர்ந்து தந்தையை கொன்ற குற்றவாளிகளை பழிவாங்கும் முயற்சியில் கதை நகரும். இதில் ராஜுக்கு ஜோடியாக கௌதமி காதலியாக நடித்திருக்கிறார்.

குருதிப்புனல்: பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு குருதிப்புனல் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமலஹாசன், அர்ஜுன், நாசர், கௌதமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது பயங்கரவாத குழுவை கட்டுப்படுத்த முயலும் இரண்டு காவல்துறை அதிகாரிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதில் கமலின் மனைவியாக கௌதமி நடித்திருப்பார். அதுவும் துணிச்சலுடன் அவரின் மானத்தை காப்பாற்றுவதற்காக ஒரு கொலையை செய்து விட்டு அதை மகனிடம் சர்வ சாதாரணமாக மறைக்கும்படி நடித்துக் காட்டி இருப்பார்.

Also read: லியோ படத்தில் கண்டிப்பாக கமலஹாசன்.. சர்ப்ரைஸாக கொடுக்க இயக்குனர் போட்ட பிளான்.!

Trending News