வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வடிவேலு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. அடியும் மிதியும் வாங்கிய கருப்பட்டி

Vadivelu Sentiment Movies: எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் அதில் காமெடி டிராக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அந்த படம் நிச்சயமாக மக்களிடத்தில் வெற்றி பெற்றுவிடும். அதிலும் வடிவேலுவின் காமெடிக்கு ஈடு இணை யாரும் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு நகைச்சுவை மன்னன் மற்றும் வைகைப்புயல் என்று முத்திரையை பெற்றுக் கொண்டார். அப்படிப்பட்ட இவர் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். அந்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

பொற்காலம்: சேரன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு முரளி, மீனா, சங்கவி மற்றும் வடிவேலு நடிப்பில் பொற்காலம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையானது ஊனமுற்றவர்களின் மனவேதனையை போக்கும் அளவிற்கு மோட்டிவேஷன் படமாக ஒவ்வொரு விஷயங்களும் செதுக்கப்பட்டிருக்கும். முக்கியமாக வடிவேலு இதில் பாடிய பாடல் மூலம் அனைவருக்கும் மன தைரியத்தையும், நம்பிக்கையும் கொடுக்கும் விதமாக அமைந்திருக்கும். அத்துடன் கிளைமாக்ஸ் காட்சியில் முரளியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள வடிவேலு சம்மதம் கொடுக்கும் வசனங்கள் அனைத்தும் கைத்தட்டலை பெற்றிருக்கும்.

சங்கமம்: 1999 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரகுமான், விந்தியா, மணிவண்ணன் மற்றும் வடிவேலு நடிப்பில் சங்கமம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மணிவண்ணன் பாசத்தை கொட்டி பிள்ளைகளை வளர்த்து வருவார். இவருடைய அளவு கடந்த அன்பை புரிந்து கொண்டு வடிவேலு பேசும் ஒவ்வொரு காட்சிகளும் அற்புதமாக அமைந்திருக்கும். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் மணிவண்ணன் இறந்த பின்பு வடிவேலுவின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருக்கும்.

Also read: திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.. ஏற்றி விட்ட ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு

ராஜகாளியம்மன்: ராம நாராயணன் இயக்கத்தில் 2000 ஆண்டு ரம்யா கிருஷ்ணன், கரண், கௌசல்யா மற்றும் வடிவேலு நடிப்பில் ராஜகாளியம்மன் படம் வெளிவந்தது. இதில் கௌசல்யாவுக்கு பாசமான அண்ணனாகவும் பொறுப்பான பாதுகாவலனாகவும் நடிப்பை எதார்த்தமாக கொடுத்திருப்பார். அத்துடன் சதிகார கும்பல் என்று தெரியாமல் தன்னுடைய தங்கையை தார வார்த்து கொடுத்த பின்பு அதை சரி செய்யும் விதமாக உயிரைக் கொடுத்து போராடி இருப்பார்.

எம்டன் மகன்: திருமுருகன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு பரத், கோபிகா, நாசர் மற்றும் வடிவேலு நடிப்பில் எம்டன் மகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் வடிவேலு தன் அக்காவிற்கு துணையாக நாசர் வீட்டிலேயே வாழ்ந்து வருவார். அப்பொழுது நாசரின் மகனாக இருக்கும் பரத் அவ்வப்போது எம்டனிடம் சிக்கிக் கொள்ளும் போது அவரை காப்பாற்றும் விதமாக சில பல வேலைகளை வடிவேலு பார்த்து வருவார். அத்துடன் இவர் செய்யும் ஒரு சில விஷயத்துக்கு நாசரிடம் அடியும் வாங்கி விடுவார். இதில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் கருப்பட்டி.

காமராசு: 2002 ஆம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் முரளி, லைலா மற்றும் வடிவேலு நடிப்பில் காமராசு திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் முரளிக்கு ஒரு சிறந்த நண்பராக இருந்து எல்லா கஷ்டத்திலும் கை கொடுத்து பக்க பலமாக நின்னு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டளை வாங்கி இருப்பார். மேலும் இப்படத்தின் கதையானது உடல் உறுப்பு தானத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

Also read: விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டு வடிவேலு என்ன செய்தார் தெரியுமா? வக்காலத்து வாங்கிய அரசியல்வாதி

Trending News