திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டைரக்ட் பண்ணுவதிலிருந்து பிரேக் எடுத்த 5 சூப்பர் ஹிட் இயக்குனர்கள்.. கடனை அடைக்கப் போராடும் சசிகுமார்

தமிழ் சினிமாவில் நிறைய இயக்குனர்கள் ஹீரோவாகவும், வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து வருகிறார்கள். நடிப்பில் கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது படங்களும் இயக்கி வருகிறார்கள். ஆனால் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த முக்கியமான ஐந்து இயக்குனர்கள் தற்போது படம் இயக்குவதற்கே பிரேக் கொடுத்துவிட்டு, படங்களின் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

செல்வராகவன்: இயக்குனர் செல்வராகவனின் அத்தனை படங்களுமே ஒவ்வொரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவானது. இவர் தோல்வி படங்களை கொடுத்தாலும் இவருக்கென்று தனியாக ரசிகர்கள் கூட்டமே உண்டு. இவர் சாணி காகிதம், பீஸ்ட் , நானே வருவேன் என தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் இவர் படங்கள் எதுவுமே இயக்கவில்லை. சமீபத்தில் பகாசூரன் எனும் படத்தில் நடித்து அதை தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்துடன் ஒரே நாளில் மோத விட்டிருந்தார் செல்வா.

Also Read:தோல்வியால் சரிந்த மார்க்கெட்.. பார்ட் 2 மூலம் பதிலடி கொடுக்கும் செல்வராகவன்

எஸ் ஜே சூர்யா: கோலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய்யை வைத்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த எஸ் ஜே சூர்யா அதன்பின்னர் அவரே இயக்கி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். இப்போது படம் இயக்குவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார் இவர்.

சசிகுமார்: சசிகுமார் ஆரம்ப காலங்களில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வந்தாலும் அதன் பின்னர் அவருக்கு எந்த படங்களுமே ஒர்க்அவுட் ஆகவில்லை. பிரம்மன் போன்ற படங்களை இயக்கி கடனும் அதிகமாகிவிட்டது. தற்போது நிறைய படங்களில் நடித்து கடனை அடைக்க போராடிக் கொண்டு வருகிறார் இவர்.

Also Read:வாழ்க்கையிலும் அடி, சினிமாவிலும் அடி.. அண்ணனை தூக்கி விட தனுஷ் எடுத்த முடிவு

அமீர்: இயக்குனர் அமீர், ராம் மற்றும் பருத்திவீரன் போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர். சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் ராஜன் என்னும் கேரக்டரில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவரும் தற்போது படங்கள் எதுவும் இயக்கவில்லை.

கே.எஸ்.ரவிக்குமார்: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அவருடைய படங்களில் பொதுவாக ஏதாவது ஒரு காட்சிக்கு வந்து விட்டுப் போவார். அதன் பின்னர் இவர் படங்களில் சில கேரக்டர்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது ஒரு சில வருடங்களாக கே.எஸ்.ரவிக்குமார் படங்கள் எதுவும் இயக்காமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

Also Read:தனுஷ் எவ்வளவோ சொல்லியும் கேட்காத செல்வராகவன்.. கடைசியில் அவமானப்பட்டது தான் மிச்சம்

Trending News