செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரசாந்த் கொடுத்த தரமான 5 சூப்பர் ஹிட் படங்கள்.. 90களில் ரஜினி, கமலுக்கு தண்ணி காட்டிய டாப் ஸ்டார் 

90ஸ் காலகட்டத்தில் டாப் ஹீரோக்களாக இருந்த ரஜினி கமல் நடித்த படங்களுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருப்பவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் சாக்லேட் பாயாக வலம் வந்து பெண் ரசிகைகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கூட தனது படங்களின் மூலம் கட்டிப்போட்டு வைத்துள்ளார். அவ்வாறு இவர் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட்  படங்களை இங்கு காணலாம்.

செம்பருத்தி: இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு கோவை தம்பி தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் பிரசாந்துடன் ரோஜா, மன்சூர் அலிகான், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் வரும் “நிலா காயும் நேரம்” பாடல் ரசிகர்களின் ஃபேவரட்டில் ஒன்றாக உள்ளது. படம் சூப்பர் ஹிட் ஆனது.

Also Read: பிரசாந்தை வளைத்து போட நினைத்த 5 நடிகைகள்.. எவ்வளவு காட்டினாலும் சிட்டாய் பறந்த மம்பட்டியான்

திருடா திருடா: மணிரத்தினம் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் திருடா திருடா. இதில் பிரசாந்துடன் ஆனந்த், அணு அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் இவர்கள் மூவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்து திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றனர். அதனைத் தொடர்ந்து சர்வதேச அளவிலான திருட்டு தொழிலில் ஈடுபட்டு அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதே இப்படத்தின் கதையாக அமைந்துள்ளது. இப்படம் பிரசாந்திற்கு சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது.

ஜீன்ஸ்: 1998 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் பிரசாந்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இப்படத்தில் சங்கர் ஒரே பாடலின் மூலம் உலகத்தில் உள்ள ஏழு அதிசயங்களையும் காண்பித்திருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கும். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் காதல் காட்சியானது ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கும். இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகவே இப்படம் உள்ளது.

Also Read: மாஸ்டர் பிரபுதேவாவிற்கே டஃப் கொடுத்த பிரசாந்த்.. நடனத்தில் அசத்திய 5 படங்கள்

ஜோடி: இயக்குனர் பிரவீன் காந்த் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜோடி. இதில் பிரசாந்துடன் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். காதலர்களாக இருக்கக்கூடிய இவர்கள் தங்களது பெற்றோரின் சம்மதத்துடன் எவ்வாறு திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை கொண்டு இக்கதையானது அமைந்துள்ளது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

கண்ணெதிரே தோன்றினால்: இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன், கரண் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் இரு நண்பர்களுக்கு இடையே உள்ள புனிதமான நட்பினை மிக அழகாக இப்படத்தில் காட்டியுள்ளனர். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல் ஆகவே அமைந்துள்ளது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற  படங்களில் ஒன்றாக உள்ளது.

Also Read: ஏர் ஹோஸ்டரை ஏமாற்றிய பிரசாந்த்.. பரபரப்பை கிளப்பிய பெண் கொடுத்த புகார்

Trending News