திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. உலக அழகியுடன் ரொமான்ஸில் மாஸ் காட்டிய ஹீரோ 

90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் பெண் ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் டாப் ஸ்டார் பிரசாந்த். அதிலும் டாப் ஹீரோக்களுக்கே டப் கொடுக்கும் விதத்தில் தனது நடிப்பின் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். மேலும் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கூட தனது படங்களின் மூலம் வசியம் செய்து வைத்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கண்ணனாகவே வலம் வந்தார். அப்படியாக பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்களை இங்கு பார்க்கலாம்.

கண்ணெதிரை தோன்றினாள்: 1998 ஆம் ஆண்டு இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணெதிரே தோன்றினாள். இதில் பிரசாந்த் உடன் சிம்ரன், கரண், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் காதலை விட நட்பிற்கு மிக ஆழமான முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் இப்படமானது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலாகவே இன்றுவரையிலும் இருந்து வருகிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. 

Also Read: பிரசாந்தை வளைத்து போட நினைத்த 5 நடிகைகள்.. எவ்வளவு காட்டினாலும் சிட்டாய் பறந்த மம்பட்டியான்

வின்னர்: சுந்தர்.சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  வின்னர். இதில் பிரசாந்த் உடன் வடிவேலு, கிரண், நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் பிரசாந்த் தான் காதலிக்கும் பெண்ணை பல்வேறு தடைகளை தாண்டி எவ்வாறு கரம் பிடிக்கிறார் என்பதை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் வைகைப்புயல் வடிவேல் உடன் பிரசாந்த் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தி இன்று வரையிலும் ஃபேவரிட் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஜோடி: 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பிரவீன் காந்த் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ஜோடி. இதில் பிரசாந்த் உடன் சிம்ரன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் எதிரும் புதிரும் ஆக இருக்கக்கூடிய இவர்கள் பின்னர் காதலர்களாக மாறுகின்றனர். இதனைத் தொடர்ந்து சூழ்நிலை காரணமாக தங்களது பெற்றோரின் சம்மதத்துடன் எவ்வாறு திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதனை மையமாக வைத்து இப்படமானது அமைந்துள்ளது. அதிலும் இப்படம் அன்றைய காதலர்கள் மத்தியில் மனம் கவர்ந்த படங்களில் ஒன்றாகவே இருந்து மாபெரும் ஹிட் ஆனது. 

Also Read: அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் முன்னணி நடிகையாக வளர முடியாது.. 40 வருடங்களாக குமுறும் பிரசாந்த் பட ஆன்ட்டி நடிகை

பூமகள் ஊர்வலம்: ராசு மதுரவன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பூமகள் ஊர்வலம். இதில் பிரசாந்த் உடன் ரம்பா ஜோடியாக இணைந்து நடித்திருப்பார். மேலும் லிவிங்ஸ்டன், விவேக், மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் ஜாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக இருந்து காதலர்களாக எவ்வாறு வெற்றி பெறுகிறார்கள் என்பதை மயமாக வைத்து இப்படமானதாக அமைந்துள்ளது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜீன்ஸ்: பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான திரைப்படம் ஜீன்ஸ். இதில் பிரசாந்த் உடன் ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். அதிலும் இவர்களுக்குள் நடக்கும் காதல் காட்சிகள் ஆனது இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கூட வெகுவாகவே கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் படம் முழுவதும் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டிருப்பதால் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.

Also Read: பிரசாந்த்துடன் நேருக்கு நேர் மோதி படுதோல்வி சந்தித்த விஜய்யின் 3 படங்கள்.. 90-களில் திணறிய தளபதி

Trending News