ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மூன்றே மாதத்தில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. தமிழ் சினிமாவை புரட்டி போட்ட வெற்றிமாறன்

சினிமாவில் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் இயக்கிய படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார் இயக்குனர். இதனைத் தொடர்ந்து மூன்றே மாதத்தில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்களை இங்கு பார்க்கலாம்.

துணிவு: வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் துணிவு. மேலும் இப்படமானது வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக வெளிவந்ததாகும். இதில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பவானி ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இப்படம் ஆனது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுது. அது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் ஹிட் அடித்தது.

Also Read: துணிவு வெற்றியால் அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்.. அப்பாவி நடிகரை டீலில் விட்ட வினோத்

வாரிசு: வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இதில் தளபதி விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களுடன் சரத்குமார், பிரபு, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் அஜித்தின் துணிவுடன் போட்டி போட்டு வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.

வாத்தி: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வாத்தி திரைப்படம் வெளியாகி உள்ளது. அதிலும் தற்பொழுது கல்வியை வைத்து எப்படி எல்லாம் பணம் பார்க்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக இப்படத்தில் காட்டி இருந்தனர். தனுஷ் வாத்தியாருக்கான கேரக்டரில் மாஸ் காட்டி இருப்பார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Also Read: விஜய்யை ஓரங்கட்டி வெற்றி கண்ட தனுஷ்.. சைலன்ட்டாக காரியத்தை சாதித்த வாத்தி

டாடா: கணேஷ் பாபு இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் கவின் நடிப்பில் வெளியான திரைப்படம் டாடா. இதில் கவினுக்கு ஜோடியாக அபர்ணாதாஸ் நடித்திருந்தார். மேலும் அப்பா, மகன் இடையே இருக்கும் பாசப்பிணை மையமாக வைத்து இப்படமானது வெளியானது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் எதார்த்தமாக அமைந்த கிளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும் வசூலிலும் சக்கை போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

விடுதலை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி முதன் முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம் விடுதலை. இதில் சூரி உடன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் சூரி போலீஸ் கேரக்டரில் மிகச் சிறப்பாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பார். அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Also Read: விடுதலை ஒரு டப்பா படம்.. முயற்சி இல்லாத இயக்குனர் என கோபத்தில் பேசிய பிரபலம்.!

Trending News