திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் தவறவிட்ட சூப்பர் ஹிட் 5 படங்கள்.. பொன்னியின் செல்வன் படத்தில் இந்த கேரக்டரா?

விஜய் தற்போது ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. ஆனால் விஜய் சில சூப்பர் ஹிட் படங்களை தவற விட்டுள்ளார். முதலில் தளபதிக்கு அந்த வாய்ப்பு வந்தும் ஒரு சில காரணங்களினால் நடிக்க முடியாமல் போய் உள்ளது. அவ்வாறு விஜய் தவற விட்டு 5 படங்களை பார்க்கலாம்.

முதல்வன் : ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முதல்வன். இப்படத்தில் முதலில் விஜயை தான் ஷங்கர் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் அப்போது விஜய் அரசியல் சம்பந்தமான படங்களில் நடிக்க ஆர்வம் இல்லாமல் இருந்ததால் முதல்வன் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.

Also Read :விஜய்யை பற்றி சொன்னது எல்லாமே பொய்.. படத்தின் புரமோஷனுக்காக இப்பவே செய்யும் மோசமான வேலை

தூள் : தரணி இயக்கத்தில் விக்ரம், விவேக், ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த படம் தூள். இப்படத்திற்கு முதலில் விஜயிடம் தான் கால்ஷூட் கேட்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் விஜய் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது.

ஆட்டோகிராப் : சேரன் இயக்கி, தயாரித்து, நடித்து 2004 இல் வெளியான திரைப்படம் ஆட்டோகிராப். இப்படத்தை விஜய்க்காக தான் சேரன் எழுதி இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படத்தில் விஜயினால் நடிக்க முடியாமல் போனது. இதனால் சேரன் தானே அந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

Also Read :டென்ஷனில் இருக்கும் விஜய்.. சைடு கேப்பில் அவர் ரூமுக்கு போய் மணிக்கணக்கில் கூல் செய்த சம்பவம்

சண்டக்கோழி : லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் நடிப்பில் அதிரடி திரைப்படமாக வெளியானது சண்டக்கோழி. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் விஜய் நடிப்பதாக இருந்த சில காரணங்களினால் கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் போனது.

பொன்னியின் செல்வன் : மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டையாடி வரும் படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தை பல வருடங்களுக்கு முன்பே எடுக்க மணிரத்தினம் முயற்சி செய்தார். அதில் தற்போது கார்த்தி நடித்திருக்கும் வந்தயத்தேவன் கதாபாத்திரத்திற்கு முதலில் விஜய்யை தான் மணிரத்தினம் தேர்வு செய்து வைத்திருந்தார்.

Also Read :8 வருடங்களாக காணாமல் போன காமெடி நடிகர்.. தூக்கி விட்டவரை கண்டுகொள்ளாத விஜய்

Trending News