வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜயகாந்த் நடிக்க தவறவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. கேப்டன் இடத்துக்கு மூன்று முறை வந்து ஜெயித்த மம்முட்டி

5 super hit films that Vijayakanth failed to act in: சினிமாவில் முன்னணி ஹீரோவாக வந்துவிட்டால் அவரை தேடி ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வரும். அப்படித்தான் விஜயகாந்த் உச்சத்தில் இருக்கும் பொழுது ஏகப்பட்ட படங்கள் அவரை சுற்றி வட்டமிட்டு இருக்கிறது. ஆனால் அவர் மற்ற படங்களில் கமிட்டானதால் ஒரு சில படங்களில் நடிக்க முடியாமல் தவற விட்டு விட்டார். அப்படி விஜயகாந்த் தவறவிட்ட படங்கள் வேறு ஒருவரால் நடிக்கப்பட்டு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன என்று தற்போது பார்க்கலாம்.

தளபதி: மணிரத்தினம் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினி நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்று தளபதி படம் ஏகப்பட்ட வரவேற்பை மக்களிடம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. ரஜினியின் நண்பராக மம்முட்டி தேவராஜ் கேரக்டரில் நடித்தார். ஆனால் இவருக்கு பதிலாக முதலில் விஜயகாந்தை நடிக்க வைப்பதாக தான் இருந்தது. ஆனால் விஜயகாந்த் அந்த நேரத்தில் கேப்டன் பிரபாகரன் படத்தில் பிசியாக இருந்ததால் இதில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

சூரியன்: பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் ஒரு ஆக்சன் படமாக சூரியன் படம் வெளிவந்தது. இந்த கதையில் சரத்குமாருக்கு பதிலாக முதலில் தேர்வானவர் விஜயகாந்த் தான். ஆனால் அவர் சின்ன கவுண்டர் மற்றும் பரதன் படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படத்திற்கு சரத்குமாரை சிபாரிஸ் பண்ணி விட்டார்.

Also read: விஜயகாந்தை வைத்து மச்சான் சுதீஷ் சேர்த்து வைத்த சொத்துக்கள்.. கேப்டன் கிட்ட கூட இவ்வளவு இருக்காது!

புதிய பாதை: பார்த்திபன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு சீதா கதாநாயகியாக புதிய பாதை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் கதையை விஜயகாந்திடம் பார்த்திபன் சொல்லிய பொழுது அவருக்கு கதை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. ஆனால் இதில் விஜயகாந்துக்கு முரண்பாடான கதாநாயகிடம் அத்துமீரும் காட்சிகள் இருந்ததால் இந்த படத்தை தவிர்த்து விட்டார். அதன் பின்பே பார்த்திபன் இந்த கேரக்டரை எடுத்து வெற்றியாக்கிவிட்டார்.

மறுமலர்ச்சி: மம்முட்டி மற்றும் தேவயானி நடிப்பில் 1998 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதி இயக்கத்தில் மறுமலர்ச்சி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் விஜயகாந்த் நடித்தால் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று தயாரிப்பாளர் ஆசைப்பட்டதால் நேரடியாக விஜயகாந்த் இடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் உளவுத்துறை படத்தில் அப்பொழுது கமிட்மெண்ட் கொடுத்திருந்தால், அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பின்னரே இந்த கேரக்டருக்கு மம்மூட்டியை தேர்வு செய்து நடிக்க வைத்தார்கள்.

ஆனந்தம்: என் லிங்குசாமி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஆனந்தம் திரைப்படம் வெளிவந்தது. இதில் மம்முட்டி திருப்பதி சாமி என்ற கேரக்டரில் மூத்த அண்ணனாகவும் பொறுப்பான குடும்பத் தலைவராகவும் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்த கதாபாத்திரத்தை முதலில் விஜயகாந்த் மனதில் வைத்து தான் இயக்குனர் கதையை எழுதி இருக்கிறார். ஏனென்றால் வானத்தைப்போல படம் எடுக்கும் பொழுது இயக்குனரிடம் லிங்குசாமி உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார்.

அப்பொழுது அவருடைய மனதிற்கு இந்த மாதிரி ஒரு கதையை எடுக்கும் பொழுது அதில் விஜயகாந்த் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்திருக்கிறார். ஆனால் விஜயகாந்த் அந்த நேரத்தில் வாஞ்சிநாதன், நரசிம்மா மற்றும் தவசி போன்ற படங்களில் ஆக்ஷன் காட்சிகளில் களமிறங்கியதால் இந்த படத்தை தவற விட்டு விட்டார். இப்படி விஜயகாந்த் நடிக்க தவறிய கதாபாத்திரமான மூன்று படங்களில் மம்முட்டி நடித்து வெற்றி பெற்றிருக்கிறார். அத்துடன் இதே மாதிரி இன்னும் ஏகப்பட்ட படங்கள் விஜயகாந்த் தவறவிட்டிருந்தாலும் இந்த படங்கள் அனைத்தும் மெகா ஹிட் ஆகி இருக்கிறது.

Also read: விஜயகாந்த் முதுகில் குத்திய வடிவேலு கலைஞர் 100 விழாவிற்கு என்டரி.. லைஃபை தொலைச்சிட்டியே பங்காளி

Trending News