விஜய் சேதுபதி சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமியின் ‘தென் மேற்கு பருவக்காற்று’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆன இவர், கடந்த 12 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து விட்டார்.
விஜய் சேதுபதி ரசிகர்களின் மனதில் ‘மக்கள் செல்வன்’ ஆகவும், சினிமா உலகின் நம்பிக்கை நாயகனாகவும், சினிமாவை வளர்க்கும் தயாரிப்பாளராகவும் மாறிவிட்டார். விஜய் சேதுபதியின் ஆரம்ப கால சினிமா வளர்ச்சிக்கு வித்திட்டது பின்வரும் 5 படங்களே.
Also Read: எரிச்சலடைந்த விஜய்சேதுபதி.. கட் அண்ட் ரைட்டா டபுள் சம்பளம் கேட்டு வாக்குவாதம்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்: இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் . இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமாரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட திரைப்படம். 80 லட்சம் செலவில் உருவான இந்த படத்தின் மொத்த வசூல் 6 கோடி.
சூது கவ்வும்: கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் வெளியிட்டது. சினிமாவிற்கு வந்த ஒரு வருடத்திலேயே விஜய் சேதுபதி சால்ட் & பெப்பர் லுக்கில் இந்த படத்தில் தோன்றியிருப்பார். இதில் விஜய் சேதுபதி தன்னை வேறு பரிமாணத்தில் காட்டியிருப்பார்.
Also Read: அலைகழிக்கவிட்டு காரியத்தை சாதித்த விஜய்சேதுபதி.. சம்பளத்தை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்கள்
பீட்ஸா: 2012 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான இந்த த்ரில்லர் திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் மிக சிறப்பான இசையை கொடுத்திருப்பார். ஒன்றரை கோடியில் உருவான இந்த திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 8 கோடி.
தென்மேற்கு பருவக்காற்று: 2010 ஆம் ஆண்டு விஜய்சேதுபதியை தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக கொண்டு வந்த திரைப்படம் தான் தென்மேற்கு பருவக்காற்று . இந்த படம் 2010 ஆம் ஆண்டிற்கான, தேசிய விருதில் சிறந்த படம், சிறந்த நடிகை (சரண்யா பொன்வண்ணன்), சிறந்த பாடலாசிரியர் (வைரமுத்து) என்னும் பிரிவுகளில் 3 விருதுகளை பெற்றது.
ஆரஞ்சு மிட்டாய்: ஆரஞ்சு மிட்டாய் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த முதல் தமிழ் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி 60 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வர்த்தக ரீதியாக வெற்றி அடையாவிட்டாலும் விஜய் சேதுபதியின் சினிமா வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய படம்.
Also Read: விக்ரமை தொடர்ந்து விஜய்சேதுபதி மிரட்டும் 2 படங்கள்.. வில்லனாகவே முத்திரை குத்தியாச்சு