திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி, விஜய்யை விட மிக மிக சொற்ப சம்பளம் பெறும் சூப்பர் ஸ்டார்ஸ்.. மம்மூட்டிக்கு கூட இவ்வளவுதானா?

Super Star Rajinikanth – Thalapthy Vijay: தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் ஆன ரஜினி, விஜய் போன்ற நடிகர்களுக்கு இணையாக சிலர் வேறு மொழிகளில் இருந்தாலும், இவர்களுக்கு இணையான சம்பளம் கிடைப்பதில்லை. இவர்களை காட்டிலும் அவர்கள் சொற்ப சம்பளமே வாங்குகின்றனர். அப்படி சொற்ப சம்பளம் வாங்கும் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களை சிலரைப் பற்றி பார்க்கலாம்.

மோகன்லால் : மலையாளம் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மோகன்லாலும் இதில் ஒருவர். லெப்டினன்ட் கேணல் என்ற விருது பெற்ற முதல் இந்திய நடிகர் இவர்தான். பத்மஸ்ரீ, பத்ம பூஷன் போன்ற விருதுகளையும் வாங்கி உள்ளார். மலையாளத் திரை உலகில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். என்னதான் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட இவருக்கு கிடைப்பது கம்மிதான். இவரின் சம்பளம் 25 கோடி ஆகும்.

Also Read:ரஜினி, யோகி காலில் விழுந்ததை குறித்து பதிலடி கொடுத்த சீமான்.. நன்றி செலுத்திய சிஷ்யன்

பிரித்விராஜ்: பிரபல மலையாள திரை உலகின் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனும் இந்த லிஸ்டில் ஒருவர். இவர் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழிகளிலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரது சம்பளம் சுமார் 5 கோடி. என்ன தான் இவர் பல மொழிகளிலும் நடித்தாலும் தமிழில் முன்னணி நடிகர்களின் விட இவருக்கு சம்பளம் குறைவுதான்.

பகத் பாசில்: சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து பகத் பாசில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் புஷ்பா 2, தலைவர் 170 படங்களிலும் நடிக்க இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவரது வருமானம் 5 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது அவருடைய நடிப்பில் வெளியான படம் படங்கள் அனைத்தும் வெற்றி அடைவதால்சம்பளம் 8 கோடியாக உயர்ந்துள்ளது.

Also Read:இதுவரை நிறையாத கஜானாவை நிரப்பிய பகத் பாசில்.. ரஜினி பட சம்பளத்துக்கு வச்ச பெரிய டிமான்ட்

மம்மூட்டி: மலையாள திரை உலகின் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் ஆன மம்முட்டியும் இந்த வரிசையில் வருகின்றார். அவர் 90களில் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ்,தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் பிரபலமாக இருந்தவர். இருப்பினும் அவரது வருமானம் 15 கோடியாக மட்டுமே உள்ளது .இது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் சம்பளத்தை காட்டிலும் மிக மிக குறைவு தான் . மம்முட்டிக்கே இவ்வளவுதான் சம்பளமா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் அளவிற்கு அளவிற்கு தமிழ் சினிமாவில் பிரபலங்கள் அதிகமாக சம்பளம் வாங்குகின்றார்கள்.

துல்கர் சல்மான்: மலையாள உலகின் பிரபல நட்சத்திரமான மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் இந்த வரிசையில் ஒருவர். துல்கருக்கு அதிகமாக பெண் ரசிகர்கள் உள்ளார்கள். இவரும் மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ்,தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் கதாநாயகனாக வலம் வருகிறார்.கடந்த 2022 ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான சீதாராமம் என்ற திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.அந்த திரைப்படம் 91.4 கோடி வரை வசூலை குவித்தது, இருப்பினும் இவரது வருமானம் எட்டு கோடியாக மட்டும் தான் உள்ளது.

Also Read:நானும் நடிகன்-டா என கண்ணீர் வரவழைத்த வடிவேலுவின் 6 படங்கள்.. சீரியஸாக நடித்து ரீ என்ட்ரியில் ஜெயித்த மாமன்னன்

Trending News