புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தரமான 5 படங்களுக்கு நேர்ந்த அநீதி.. அர்ஜுன் தாஸ் உசுர கொடுத்து நடிச்சும் பிரயோஜனம் இல்ல

Tamil Movies: 2023ல் ஐந்து செம தரமாக கதைகளைக் கொண்டு படங்கள் வெளியானது, ஆனால் அதற்கு பெரிசா எந்த ரீச்சும் கிடைக்கவில்லை. வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் இருக்கும் அளவிற்கு இருந்த திரைப்படங்கள் என்னவென்றும், அர்ஜுன் தாஸ் தூள் கலப்பும் அளவுக்கு நடித்தும், ஹிட் ஆகாமல் போன திரைப்படமும் என்னவென்று பார்க்கலாம்.

பொம்மை நாயகி: ஷான் இயக்கத்தில் பா ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு கூட்டணியில் வெளியான திரைப்படம் பொம்மை நாயகி. இதில் டீக்கடையில் வேலை செய்யும் தந்தை, தனது ஒன்பது வயது மகளுக்கு நடந்த கொடுமைகளுக்கு நீதி கேட்பதே கதையாகும். யோகி பாபுவை நாம் இதுவரை காமெடியனாக நிறைய படங்களில் பார்த்திருப்போம் ஆனால் இதில் அப்படியே ஆப்போசிட்டாக நடித்து அசத்திருப்பார். கதை நன்றாக இருந்தாலும், ஏற்கனவே இது போன்ற கதைகளில் படங்கள் இருப்பதால் பத்துல ஒன்னு என்பது போல் ஆகிவிட்டது.

Also Read:கமலிடம் ரெண்டு நிபந்தனையை வைத்த மம்மூட்டி.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

தமிழ் குடிமகன்: இசக்கி கருணாகரன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தமிழ் குடிமகன். இதில் சேரன், ஸ்ரீ பிரியங்கா, லால் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சார்ந்த பிரச்சனைகளும், சாதி , ஊழல்கள், மக்களுக்கு நேரும் அநீதிகள் போன்றவற்றை மையமாகக் வைத்த படமாகும். நல்லது சொன்னா யாருக்கு தான் பிடிக்கும், அது போல தான் இதன் நிலைமையும்.

அநீதி: வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துர்சா விஜயின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் அநீதி. மனநலம் பாதிக்கப்பட்ட ஹீரோ ஃபுட் டெலிவரி பாய்யாக வேலை செய்யும்பொழுது, ஹீரோயினிடம் பழக்கம் ஏற்பட்டு காதல் உண்டாகும். பிறகு என்ன நடந்தது என்பது கதை. பொதுவாக வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாக திரைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கும். அர்ஜுன் தாஸ் என்னதான் உயிரைக் கொடுத்து நடித்திருந்தாலும், சம்பந்தமே இல்லாமல் ட்விஸ்ட்கள் வருவதால் திரைப்படம் கை கொடுக்கவில்லை.

Also Read:இந்த சீசனில் விஜய் டிவி இறக்கிவிடும் வாரிசு.. மொத்த லிஸ்டையும் பார்த்தா டிஆர்பி-கே பஞ்சம் இருக்காது போலையே

நூடுல்ஸ்: தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் ஹரிஷ் உத்தமன் ஷீலா ராஜ்குமார் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் நூடுல்ஸ். சுயமரியாதைக்கும், அதிகார வர்க்கத்திற்கும் நடக்கும் மோதல் தான் இந்தத் திரைப்படம். மொத்த படமும் ஒரு வீட்டிலேயே எடுத்திருக்காங்க, ஆனா நமக்கு போரடிக்காத மாதிரி இன்ட்ரஸ்டிங்கா எடுத்திருக்கிறார்கள். முடிவு த்ரில்லிங்காக இருந்தாலும் ஆரம்பம் சரியில்லாததால் ரசிகர்களுக்கு படமாடா இது என சொல்லி முகம் சுளிக்கும் அளவிற்கு இருந்தது.

அடியே: விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கௌரி கூட்டணியில் வெளிவந்த படம் அடியே. ஹீரோ ரியாலிட்டி வாழக்கையில் இருந்து பேர்லல் யூனிவர்சுக்கு சென்று, மீண்டும் ரியாலிட்டி வாழ்க்கைக்கு திரும்பி, அது எப்படி நடந்தது என்று ஆராய்வதே திரைப்படம். வழக்கமாக இருக்கும் திரைப்படங்களை விட இது வித்தியாசமாக சுவாரசியமாகவும் இருந்தது. சிறிது குழப்பமான கதை என்பதால் பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை.

Also Read:100 கோடி வசூல் செய்தாலும் அனகோண்டாவுக்கு பிரயோஜனம் இல்ல.. கேரியரை கிளோஸ் செய்த எஸ்ஜே சூர்யா

Trending News