வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

5 தமிழ் படங்களை ரீமேக் செய்து பட்டைய கிளப்பிய சிவராஜ்குமார்.. அஜித், சமுத்திரக்கனிக்கு கொடுத்த Tough

சிவராஜ்குமார் ஜெய்லர் 2 படத்தில் நரசிம்மாவாக நடித்து அனைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நீங்காத இடம் பிடித்து விட்டார். எப்பொழுதுமே ஆக்சன் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிவராஜ்குமார் தமிழ் படங்களையும் ரீமேக் செய்து நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த ஐந்து படங்கள்,

அசுரா: 2001ஆம் ஆண்டு சிவராஜ் குமார் இந்த படத்தில் நடித்தார். இந்த படம் அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான அமர்க்களம் திரைப்படம்.1 999 வெளிவந்த படத்தை பார்த்த சிவராஜ்குமார் கவரப்பட்டு அசுரா என்று ரீமேக்கில் நடித்தார்.

பைரகி: 2017ஆம் ஆண்டு பரத் நடிப்பில் கடுகு என்ற ஒரு திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தை 2002 ஆம் ஆண்டு பைரகி என சிவராஜ் குமார் ரீமேக் செய்து நடித்தார். நல்ல கதைக்களம் இருந்தும் தமிழில் இந்த படம் ஓடவில்லை.

லாட்டா அலியன்றே: 1996 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தை தான் 2000மாவது ஆண்டில் கலாட்டா அலியன்றே என ரீமேக் செய்து நடித்தார் சிவராஜ் குமார். இது முழுக்க முழுக்க காமெடி படமாக வெளிவந்தது.

ட்ரோனா: 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்தது சமுத்திரக்கனியின் சாட்டை திரைப்படம். இந்த படத்தை தான் 2020ஆம் ஆண்டு ட்ரோனா என ரீமேக் செய்து நடித்தார் சிவராஜ் குமார். இந்த படம் அவரது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சந்திரோதயா: 1999ஆம் ஆண்டு டைரக்டர் மகேந்தர்இயக்கிய படம் சந்திரோதயா. இது தமிழில் மணிரத்தினம் இயக்கிய மௌன ராகம் படத்தின் ரீமேக். இந்த படத்தில் கார்த்திக் மற்றும் மோகன் நடித்திருந்தார்கள். இந்த சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்தார் சிவராஜ் குமார்.

Trending News