திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முட்டி மோதியும் வெற்றியை தொட முடியாத 5 ராசி இல்லாத நடிகர்கள்.. கரையேற முடியாமல் தவிக்கும் அருண்விஜய்

Actor Arun Vijay: தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்கள் பல வருடங்களாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு வெற்றிப் படம் கூட கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல நடிப்பு திறமை இருந்தும், முக வசீகரம் இருந்தும் கூட வெற்றி என்பது இன்று வரை அவர்களுக்கு எட்டாத கனியாகவே இருக்கிறது. இப்படி தொடர் தோல்விகளை கொடுத்து வருவதால் சினிமா வட்டாரத்தில் இவர்களை ராசி இல்லாத நடிகர்கள் என்று சொல்லி ஒதுக்கியும் விடுகிறார்கள்.

அருண் விஜய்: நடிகர் அருண் விஜய் கிட்டத்தட்ட 90 களின் இறுதியில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கென்று எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. நடிகர் அஜித்குமாரின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் இவர் நடித்த விக்டர் கேரக்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த கேரக்டருக்கு பிறகு அருண் விஜய் வெற்றி நாயகனாக மாறியது போல் தமிழ் சினிமாவில் அறியப்பட்டாலும், இன்று வரை முன்னணி ஹீரோவாக மாற முடியாமல் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

Also Read:ராசியே இல்லாத அருண் விஜய் தம்பிக்கு மீண்டும் சிக்கல்.. கடைசி நேரத்தில் காலை வரிய லைக்கா

ஷ்யாம்: நடிகர் ஷ்யாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய தொடக்கத்தில் இவருக்கென்று பெண் ரசிகைகள் அதிகம் இருந்தார்கள். நடிகர்கள் பிரசாந்த் மற்றும் மாதவன் போன்று சாக்லேட் பாயாக பல வருடங்களுக்கு நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர், கொஞ்ச நாளிலேயே காணாமல் போய்விட்டார். தற்போது நிறைய படங்களில் நடித்தாலும் அவர் எதிர்பார்த்த வெற்றி என்பது அவருக்கு கிடைக்கவில்லை.

ஜெய்: சென்னை 28 திரைப்படத்தில் பத்து நடிகர்களில் ஒருவராக நடித்தாலும் நடிகர் ஜெய்க்கு அதன் பிறகு கிடைத்த வாய்ப்புகள் எல்லாமே வெற்றி வாய்ப்புகளாகத்தான் இருந்தது. தேவையில்லாத குடிப்பழக்கம், காதல் என சினிமாவில் அக்கறை இல்லாமல் சுற்றியதால் ஜெய் தற்போது கைவசம் ஒரு வெற்றிப் படம் கூட இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read:ராசி இல்ல என முத்திரை குத்தப்பட்ட 5 நடிகைகள்.. எல்லோரும் ஒதுக்கி வைக்கும் விஜய் பட நடிகை

கௌதம் கார்த்திக்: நடிகர் கௌதம் கார்த்திக், அவருடைய அப்பா கார்த்திகை போலவே வசீகரமான முகம் மற்றும் துருதுறுப்பான நடிப்பு என சினிமாவில் வந்த புதிதில் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படங்களும் அமையவில்லை. மேலும் அடல்ட் படங்களில் நடித்து மொத்தமாக தன்னுடைய பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

விக்ராந்த்: நடிகர் விக்ராந்த் கற்க கசடற என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இவர் இந்த படத்தில் அறிமுகமாகிய பிறகு தான் தளபதி விஜய்யின் நெருங்கிய உறவினர் என்பது ரசிகர்களுக்கு தெரியும். முத்துக்கு முத்தாக மற்றும் கோரிப்பாளையம் போன்ற படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை இவர் வெளிப்படுத்தி இருந்தார். இருந்தாலும் விக்ராந்திற்கு அடையாளம் சொல்லும் அளவிற்கு இன்று வரை ஒரு படம் கூட அமையவில்லை.

Also Read:350 பெண்களுடன் தொடர்பில் இருந்த விஜய் பட வில்லன்.. பரபரப்பை கிளப்பிய பயில்வான்

Trending News