வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் கல்லாக் கட்டும் 5 ஹீரோக்கள்.. ஸ்டைலை வைத்து 3 தலைமுறைகளாக அசத்தும் ரஜினி

Super Star Rajinikanth: நடிகர்களில் கமலஹாசன், விக்ரம், சூர்யா போன்றவர்கள் படத்திற்கு படம் ஏதாவது ஒரு வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக தங்கள் உடலை வருத்திக் கொண்டு, தோற்றத்தை மாற்றிக் கொண்டு, உயிரைக் கொடுத்து நடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த ஐந்து ஹீரோக்கள் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் நடிப்பில் மட்டுமே வித்தியாசத்தை காட்டி நடித்து கல்லா கட்டி வருகிறார்கள்.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே உடம்பை ஏற்றுவது, குறைப்பது என எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டார். கடந்த மூன்று தலைமுறைகளாக சூப்பர் ஸ்டாராக ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் ஸ்டைலை மட்டுமே வைத்து படங்களில் வித்தியாசம் காட்டி வருகிறார். அவருடைய ரசிகர்களும் ரஜினி சும்மா கூட ஸ்கிரீனில் வந்து நின்றாலே போதும் என நினைக்கிறார்கள்.

Also Read:எதிர்நீச்சல் சீரியலை பற்றி குணசேகரனிடம் பேசிய ரஜினிகாந்த்.. ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

விஜய்: நடிகர் விஜய் மற்ற ஹீரோக்களுடன் ஒப்பிடும் பொழுது பயங்கரமாக நடனம் ஆட கூடியவர். ஒரு சில மாஸான வசனங்கள் இவர் பேசினால் மட்டும்தான் அது ரசிக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் விஜய்யை பொறுத்த வரைக்கும் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்களை நெருங்கி இருந்தாலும் இன்று வரை உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுத்ததில்லை.

விஜய் சேதுபதி: சினிமாவில் ஒரு ஹீரோ வாய்ப்புக்காக பல வருடங்களாக போராடியவர் விஜய் சேதுபதி. இன்று ரசிகர்கள் கொண்டாடும் மக்கள் செல்வனாக வெற்றி கண்டு இருக்கிறார். ஆனால் இவர் தன்னுடைய உடல் தோற்றத்தில் பெரிதாக எப்போதுமே கவனம் செலுத்துவதில்லை. சமீபத்தில் உடல் எடை அதிகம் கூடிய பொழுது கூட அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

Also Read:லியோவுக்கு ஜெயிலர் கொடுத்த அதிர்ச்சியே இன்னும் குறையல.. சூடு ஆறும் முன் போட்டிக்கு வந்த சூர்யா

கார்த்தி: நடிகர் கார்த்தி முதல் படத்திலேயே கிராமத்து இளைஞனைப் போல் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார். தொடர்ந்து மாடர்னாக, போலீசாக, திருடனாக பல கேரக்டர்களில் இவர் நடித்திருக்கிறார். இருந்தாலும் எந்த ஒரு படத்திற்காகவும் தன்னுடைய உடல் தோற்றத்தில் இவர் ரிஸ்க் எடுப்பது கிடையாது.

சிவகார்த்திகேயன்: சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து இன்று குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் அவ்வப்போது படங்களின் கேரக்டருக்கு ஏற்றபடி உடல் எடையை கொஞ்சம் ஏற்றி, குறைப்பதோடு சரி, மத்தபடி இதுவரை எந்த ஒரு படத்திற்காகவும் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்தது இல்லை.

Also Read:ஒரு டேக்கில் நடிப்பதற்கு நான் என்ன கமலா.? இசையமைப்பாளரை வாயடைக்க வைத்த சூப்பர் ஸ்டார்

Trending News