பொதுவாக ஒரு திரைப்படம் என்றால் அதில் ஹீரோவுக்கு மாஸ் சேருவதே அவரை எதிர்த்து நிற்கும் வில்லன் யார் என்பதை பொறுத்துதான். ஆனால் தளபதி விஜய் வில்லன்களே இல்லாத முழுக்க முழுக்க பாசிட்டிவ் நிறைந்த படங்களில் நடித்து வெற்றி பெற்று இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆம் இந்த ஐந்து படங்களில் விஜய்க்கு வில்லன் என்று ஒரு கேரக்டரே இல்லை. முழுக்க முழுக்க விஜய்யை மையமாக வைத்தே இந்த படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி பெற்று இருக்கின்றன.
பூவே உனக்காக: தளபதி விஜய்யின் சினிமா கேரியரில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம் பூவே உனக்காக. இந்த படத்தில் ஒருதலையாக காதலிக்கும் ராஜா என்னும் கேரக்டர் அந்த காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவளுடைய சொந்த ஊரிலேயே போய் அவளுடைய குடும்பத்தை சேர்த்து வைப்பது தான் கதை. இதில் ஜெய்கணேஷ் மற்றும் மலேசியா வாசுதேவன் வில்லன்கள் போல் காட்டப்பட்டு இருப்பார்களே தவிர அவர்கள் குடும்ப சண்டையாய் மட்டுமே பிரிந்திருப்பார்களே தவிர, அவர்களுக்கும் விஜய்க்கும் எந்த ஒரு சம்பந்தமும் இருக்காது.
Also Read:விஜய்யுடன் நேருக்கு நேர் மோதும் கார்த்தி.. பெரும் பிரச்சனையை கிளப்பிய நெட் பிளிக்ஸ்
குஷி: நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் குஷி. இன்றுவரை சினிமா ரசிகர்களால் இந்த படம் கொண்டாடப்பட்டு வருகிறது. சொல்லப்படாத காதல், அந்த காதலை விட அதிகமாக இருக்கும் ஈகோ இதை மையமாகக் கொண்டே இந்த படம் எடுக்கப்பட்டு இருக்குமே தவிர இதிலும் விஜய்க்கு வில்லன் கேரக்டர் கிடையாது.
துள்ளாத மனமும் துள்ளும்: விஜய் ரசிகர்களால் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களாலும் கொண்டாடப்படும் திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். இந்த படத்தில் ஒரு அழகான காதல் கதையில், சிறந்த பாடல்களையும் சேர்த்துக் கொடுத்திருப்பார் இயக்குனர். காதல் என்ற உணர்வையும் தாண்டி பார்ப்பவர்களுக்கு காட்டவே படாத விஜயின் அம்மா கேரக்டர் இறந்தவுடன் வரும் சென்டிமென்ட் காட்சியில் அனைவரையும் அழவே வைத்திருப்பார்கள்.
Also Read:அரசியல் பிரவேசத்தை வலுவாக பதித்த விஜய்.. ஸ்டாலின் இல்லாத நேரத்தில் ஒதுக்கிய 2 கோடி
ஷாஜகான்: பூவே உனக்காக திரைப்படத்தை போல் ஒருதலை காதலை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தாலும், கதை முழுக்க அவர் காதலை கொண்டாடும் விதமும், தன்னுடைய காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் விதமும், அவை எல்லாவற்றிற்கும் மேலாக வசீகரமான அவருடைய முகம் என வில்லன் கேரக்டர் என்ற ஒன்று இல்லாமலேயே வெற்றி பெற்று விட்டார் விஜய்.
சச்சின்: தளபதி ரசிகர்களால் சச்சின் திரைப்படத்தை எப்போதுமே மறக்க முடியாது. அந்த அளவுக்கு மனதோடு ஒன்றிப்போன படம் அது. படம், கதை என்பதை எல்லாம் தாண்டி விஜய்யின் அழகு மற்றும் இயல்பான நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து இருக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படமும் விஜய்யின் சினிமா காரரில் ஒரு மைல் கல்லாக அமைந்த படம்.
Also Read:விஜய் மார்க்கெட்டை காலி செய்ய நினைக்கும் சைக்கோ இயக்குனர்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் தளபதி