வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஐபோனில் படமாக்கப்பட்ட 5 தமிழ் படங்கள்.. 80% காட்டிலே படமாக்கிய வெற்றிமாறன்

தென்னிந்திய சினிமாவில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டு அதற்கான பணத்தை திருப்பி எடுப்பது என்பது அதிர்ஷ்டத்தால் மட்டுமே முடியும். ஆனால் இதற்கு ஏற்றார் போல எவ்வளவு செலவுகளை குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு படத்தை எடுத்து வெளியிட்டு நஷ்டத்தை குறைத்துக் கொள்வோம் என்று நோக்கிலே இன்றைய தயாரிப்பாளர்கள் திரைப்படத் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக சிக்கனமாக செல்போனிலேயே திரைப்படம் முழுவதையும் படமாக்கி உள்ளனர். அதுமட்டுமின்றி சில இடங்களில் கேமராக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும். அப்படி ஐபோனில் படமாக்கப்பட்ட 5 படங்களை பற்றி பார்ப்போம்.

விடுதலை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் கலந்த திரைப்படம் ஆகும். இதில் விஜய் சேதுபதி, சூரி மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெயமோகனின் “துணைவன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு விடுதலை படமானது தயாராகி வருகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்திலும் சூரி ஒரு போராளியாக போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

விடுதலை படமானது 2 பாகங்களாக வெளியாக உள்ளது. இதன் முதல் பாகத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அடுத்த தேர்ந்தெடுக்கும் படங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இதனை திரையரங்கில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விடுதலை படமானது 80% காட்சிகள் வனபகுதியில் எடுத்து உள்ளதால் இதற்கு கேமராக்களுக்கு பதிலாக ஐபோனை பயன்படுத்தி எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கேவலமான செயலுக்கு உடந்தையாக இருக்கும் வெற்றிமாறன்.. போன உயிர் போயிடுச்சு, துரதிஷ்டமானா இரங்கல் அறிக்கை

அகண்டன்: பன்முகங்களைக் கொண்ட சந்தோஷ் நம்பிராஜன் இயக்கி நடித்துள்ள இப்படம் ஒரு கமர்சியல் படமாக அமைந்துள்ளது.அகண்டன் திரைப்படத்தில் 14 புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களில் கிருஷ்ணா, இளங்கோவன், முகமது அலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிட்டதட்ட 110 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் முழுக்க முழுக்க செல்போனிலேயே எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் ஆகும்.

இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் கூறுகையில் ஐபோன் 11 ப்ரோ டைப் செல்போனில் தான் அகண்டன் திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.படத்தினை திரையரங்கில் வெளியிடும் வகையில் சில தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உள்ளனர். அதனைத் தொடர்ந்து படத்தின் தரத்திற்காக பிளம்மிங் ப்ரோ என்ற செயலியை பயன்படுத்தி உள்ளனர். செல்போனில் எடுக்கப்பட்டது தெரியாத வகையில் இந்த அகண்டம் திரைப்படம் தயாராகியுள்ளது.

Also Read: பணத்துக்காக நல்ல பெயரை கெடுத்துக் கொண்ட வெற்றிமாறன்.. மக்களை ஏமாற்ற இப்படி ஒரு நாடகமா?

லாக் டவுன்: நடிகை சஹானா நடிப்பில் உருவாகியிருக்கும் லாக்டவுன் திரைப்படமும் பெரும்பாலும் ஐபோன் எல்லாம் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஹானா நடித்ததை தொடர்ந்து அவர் மலையாளத்திலும் இரண்டு படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவர் மர்மமான முறையில் குளியலறையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சையும் கிளம்பியது.

பயமறியா பிரமை: குரு சோமசுந்தர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் அடுத்த வருடம் ரிலீசுக்கு காத்திருக்கிறது சாதனை நோக்கத்தில் பெரும்பாலும் கேமராக்களில் எடுக்கப்படாமல் நிறைய காட்சிகள் ஐபோனை வைத்தே படம் ஆகி உள்ளனர். இதற்காக பல தொழில்நுட்பத்தையும் உபயோகித்து படத்தின் தரத்தை உயர்த்தி காட்டியுள்ளனர்.

அடடே: பல இளம் இயக்குனர்கள் சேர்ந்து ஐபோனில் படமாக்க வேண்டும் என்று, சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகவே கேமரா இல்லாமல் இந்தப் படத்தை உருவாக்கினார்கள். கேமரா இல்லாமல் உருவான படம் என்ற சாதனையை பெற வேண்டும் நோக்கத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது.

Also Read: 2022ல் ஒடிடியை மிரட்டிய 8 வெப் தொடர்கள்.. வீரவிளையாட்டை விட்டு கொடுக்காமல் வெளிவந்த ‘பேட்டை காளி’

இந்த 5 படங்களும் அடர்ந்த காடுகளிலும் கேமரா பயன்படுத்த முடியாத இடங்களிலும், சாதனை நோக்கத்திலும் படங்கள் உருவாக்கப்பட்டது. அதிலும் விடுதலை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் 80 சதவீத படப்பிடிப்பை காட்டிலேயே எடுத்ததால் பெரும்பாலும் ஐபோனை மட்டுமே பயன்படுத்தினார்.

Trending News