வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ரகுவரன் ஹீரோவாக முத்திரை பதித்த 5 படங்கள்.. கதாபாத்திரத்திற்காக பழகிய கேடுகெட்ட பழக்கம்

Actor Raghuvaran:சினிமா ரசிகர்களை பொறுத்த வரைக்கும் முன்பெல்லாம் வில்லன் கேரக்டரில் நடிக்கும் நடிகர்களை பார்த்தாலே வெறுப்பு தான் வரும். ஆனால் அப்படி ஒரு கண்ணோட்டத்தையே திரையில் மாற்றியவர் தான் ரகுவரன். இவர் செய்யும் வில்லத்தனம் ரொம்பவும் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்கள் படத்திற்கு படம் இவரை கொண்டாட ஆரம்பித்தனர். வில்லனாக மட்டும் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டாமல், ரகுவரன் இந்த 5 படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி பெற்றார்.

ஏழாவது மனிதன்: 1982 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஏழாவது மனிதன். இந்த படத்தின் மூலம்தான் ரகுவரன் முதன்முதலில் நடிகராக திரை உலகிற்கு அறிமுகமானார். முதல் படமே அவருக்கு தேசிய விருது படமாக அமைந்துவிட்டது. தமிழில் முதன் முதலில் எடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட கதை இதுவாகும். இந்த படம் நல்ல விமர்சனத்தையும் பெற்றது.

Also Read:மலையாளத்தில் அமோக கலெக்சன்.. காசு மழை கொட்டும் என ரீமேக் செய்து மண்ணை கவ்விய 5 படங்கள்

ஒரு ஓடை நதியாகிறது: இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஒரு ஓடை நதியாகிறது. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக விருப்பம் இல்லாத ஒரு பெண்ணுடன் தவறாக நடந்து கொள்ளும் ரகுவரன் அதை நினைத்து குற்ற உணர்ச்சியில் படம் முழுக்க அந்தப் பெண்ணை தேடுவது, அவள் கிடைத்த பின் அவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களையும் மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

கைநாட்டு: வி சி குகநாதன் இயக்கத்தில் ரகுவரன் நடிப்பில் 1988 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைநாட்டு. இந்த படத்தில் ரகுவரனுடன் நிஷாந்தி, ஜெய் கணேஷ், சார்லி, செந்தில், மாதுரி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படமும் ரகுவரன் நடிப்பில் நல்ல விமர்சனத்தை பெற்ற திரைப்படமாகும்.

Also Read:தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்த 5 சக்ஸஸ்ஃபுல் நடிகர்கள்.. பெயரை உடைத்து வெற்றி கண்ட ஜெயம் ரவி

குற்றவாளி: 1989 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜா இயக்கத்தில் ரகுவரன் மற்றும் ரேகா நடிப்பில் வெளியான திரைப்படம் குற்றவாளி. இந்த படத்தில் சரண்ராஜ், நிழல்கள் ரவி, பூரணம் விஸ்வநாதன், மனோரமா, வினு சக்கரவர்த்தி, கமலா காமேஷ் போன்ற முக்கியமான நடிகர்களும் நடித்திருந்தனர். இந்த படமும் விமர்சன ரீதியாக பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்றது.

தியாகு: இயக்குனர் எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரகுவரன் நடிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தியாகு. இந்த படத்தில் ரகுவரனின் கேரக்டர் எப்போதுமே குடித்துக்கொண்டு போதையில் இருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் எதார்த்தமாக நடிக்க வேண்டும் என நினைக்கும் ரகுவரன் இந்த படத்திற்காக மது அதிகமாக குடிக்க பழகி தான், அவருக்கு அந்த பழக்கம் நிரந்தரமாக மாறிப்போனது.

Also Read:ட்ரெய்லர் ஓட மாயமாக மறைந்து போன 5 படங்கள்.. சந்தானத்திற்கு கை கொடுக்காத சர்வர் சுந்தரம்

Trending News