சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

வில்லன்களுக்கு பிளாஷ்பேக் வைத்த 5 படங்கள்.. தளபதிக்கு இணையாக கெத்து காட்டிய ‘பவானி’

பொதுவாக திரைப்படங்களை பொருத்தவரைக்கும் ஒரு படத்தின் மாஸ் என்பது அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் நடிகரை வைத்தது தான் முடிவாகிறது. ஆனால் ஒரு சில படங்களை பொறுத்த வரைக்கும் அந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோவையே மறக்கும் அளவுக்கு வில்லன் கேரக்டர்கள் அமைந்துவிடும். அந்த படத்தை மறந்தாலும், அதில் நடித்த நடிகர், நடிகைகளை மறந்தாலும், அந்த வில்லன் கேரக்டரை ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

2.0: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி படமான எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியானது தான் 2.0. இந்த படத்தில் பாலிவுட் ஹீரோ அக்சய் குமார் வில்லனாக நடித்திருப்பார். மேலும் இந்த பட்சி ராஜன் என்னும் கேரக்டர் ஏன் வில்லனாக மாறினார் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக்கையே வைத்திருப்பார் இயக்குனர் சங்கர்.

Also Read: தொடர் தோல்விகளால் கஷ்டத்தில் இருக்கும் ரஜினி.. யாருக்கும் உதவ கூட முடியாத நிலையில் தனது சொத்து மதிப்பு

விக்ரம் வேதா : கோலிவுட் சினிமாவில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது விக்ரம் வேதா. இந்த படத்தில் முதன்முறையாக நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்தார்கள் . மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி எப்படி ஒரு கேங்ஸ்டர் ஆனார் என்பதற்கு பிளாஷ்பேக் இருக்கும்.

அருந்ததி: நடிகை அனுஷ்காவுக்கு சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது அருந்ததி தான். இந்த படத்தின் வில்லனாக வரும் பசுபதி என்னும் கேரக்டர் எப்படி அகோராவாக மாறினார் என்பதற்கு பிளாஷ்பேக் இருக்கும். நடிகர் சோனு சூட் எத்தனை திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இதுவரை இவர் அருந்ததி திரைப்படத்தின் பசுபதியாக தான் அடையாளப்படுத்தப்படுகிறார்.

Also Read: வசூல்ராஜாவை வச்சு செய்த ரிலீஸ்.. என்னடா இது தளபதி விஜய்க்கு வந்த சோதனை

மாஸ்டர்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மிகப்பெரிய மாஸ் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். இந்த படம் ஆரம்பிப்பது படத்தின் வில்லனான பவானியின் பிளாஷ்பேக்கை வைத்து தான். மேலும் நடிகர் விஜய் சேதுபதியின் மாஸ் மற்றும் கிளாஸ் எந்த இடத்திலும் தளபதி விஜய்யை விட குறைந்து விடாமல் செதுக்கியிருப்பார் இயக்குனர் லோகேஷ்.

தனி ஒருவன்: வில்லனுக்கு எல்லாம் வில்லன் என்று கூட தனி ஒருவன் திரைப்படத்தின் சித்தார்த்த அபிமன்யுவை கூறலாம். இந்த கேரக்டரில் நடித்த அரவிந்த்சாமியின் பிளாஷ்பேக்கை வைத்து தான் திரைப்படமே தொடங்கும். மேலும் இந்த வில்லன் கேரக்டரை மையமாக வைத்து தான் மொத்த திரைப்படத்தின் கதையும் அமைந்திருக்கும்.

Also Read: 8 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் தலை காட்டாத காமெடி நடிகர்.. விஜய் உடன் ஹிட் படத்தில் நடித்த ஹீரோ

- Advertisement -spot_img

Trending News