ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வசூலில் பில்டப் கொடுத்து மொக்கை வாங்கிய 5 படங்கள்.. அலப்பறை கொடுத்து டேமேஜ் ஆன ருத்ரன்

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் ஒரு சில படங்களுக்கு ரிலீசுக்கு முன்பே பயங்கர பில்டப் கொடுக்கப்படும். ரசிகர்களும் அந்த படத்தை ஆஹா , ஓஹோ என நம்பி இருப்பார்கள். ஆனால் ரிலீசுக்கு பிறகு தான் கதை மண்ணை கவ்வி விடும். அப்படி படம் தோல்வியை தழுவினாலும், அதை வெளியில் சொல்லாமல் பழைய பில்டப்பை அப்படியே காப்பாற்றி வருவார்கள். இருந்தாலும் உண்மை நிலவரத்தை அதன் வசூல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கப்சா: கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் கப்சா. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. படத்தின் பெயருக்கு ஏற்ப பில்டப்பும் பயங்கர கப்சாவாக இருந்தது. இறுதியில் இந்த படம் வசூலில் அடிமட்டத்திற்கும் கீழ் போனது. இருந்தாலும் கொடுத்த பில்டப்பை காப்பாற்றிக்கொள்ள படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 120 கோடியில் உருவான இந்த படம் 50 கோடியை கூட தாண்டவில்லை.

Also Read:கருத்து கேட்டு கேட்டு நானே கருத்துட்டேன்.. அகிலன் படத்தை கிழித்து தொங்க விட்ட ப்ளூ சட்டை மாறன்

அகிலன் : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவான படம் அகிலன். இதனாலேயே இந்த படத்திற்கு பயங்கர பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால் பட ரிலீசுக்கு பிறகு வணிக ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்தது. ஜெயம் ரவி இதுவரை நடித்த திரைப்படங்களில் படு தோல்வி அடைந்த படம் அகிலன் தான். 20 கோடியில் உருவான இந்த படம் 8 கோடி தான் வசூல் செய்தது.

பகாசூரன்: பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி போன்ற திரைப்படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் வெளியான படம் தான் பகாசூரன். இந்த படத்தில் செல்வராகவன் ஹீரோவாக நடித்திருந்தார். சமூக விழிப்புணர்வை சொல்லும் திரைப்படம் என்பதால் ஆரம்பத்தில் என்னவோ ரசிகர்களிடையே நல்ல பெயர் வாங்கினாலும் எதிர்பார்த்த வசூலை இந்த படம் பெறவில்லை. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 2.88 கோடி வசூலித்தது.

Also Read:ஹார்பர் க்ரைமை வெளிச்சம் போட்டு காட்டும் அகிலன்.. ஜெயம் ரவிக்கு வெற்றியா, தோல்வியா.? ட்விட்டர் விமர்சனம்

ருத்ரன்: ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், சரத்குமார் நடிப் பில் வெளியான படம் ருத்ரன். வழக்கம் போல தான் நடித்த படங்களுக்கு ஓவர் பில்டப் கொடுக்கும் லாரன்ஸ் இந்த படத்திலும் அதையே செய்திருந்தார் . தன் குடும்பத்தை கொலை செய்த வில்லனை பழி வாங்கும் ரொம்ப பழைய கதையை மீண்டும் எடுத்து தமிழ் சினிமாவை பின்னோக்கி எடுத்து சென்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். 40 கோடி செலவில் உருவான இந்த படம் 10 கோடி தான் வசூலித்தது.

மைக்கேல்: விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் என்ற வெயிட்டான நடிகர்களுடன் வெளியான படம் மைக்கேல். விஜய் சேதுபதிக்காகவே இந்த படத்திற்கு பயங்கர பில்டப் கொடுக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே திருப்தியை ஏற்படுத்தவில்லை. 15 கோடியில் உருவான இந்த படம் 13 கோடி வசூலித்தது.

Also Read:ருத்ரன் படத்தை ஓட வைக்க கொட்டிக் கொடுக்கும் லாரன்ஸ்.. புது சர்ச்சையில் சிக்கிய மாஸ்டர்

Trending News