புதன்கிழமை, ஜனவரி 15, 2025

90ஸ் கிட்ஸுகளை மிரளவிட்ட 5 வில்லன்கள்.. அப்பவே லியோ அப்பாவுக்கு டஃப் கொடுத்த சண்டா

Top 5 90’s Villians: சினிமாவில் வில்லன் கேரக்டர் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் அடைந்து வருகிறது. இப்போது வரும் படங்களில் வில்லன்கள் ஹீரோக்களை விட ஸ்மார்ட் ஆக இருக்கிறார்கள். அப்படியே எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலத்தில் போகும்பொழுது கத்தி சண்டை, வாள் சண்டை போடுபவர்களாக இருந்தார்கள். இடையில் 90களின் காலகட்டத்தில் வில்லன்கள் எல்லோருமே தங்களுடைய கோரமான முகம் மற்றும் குரலை வைத்து மிரட்டினார்கள். அப்படி 90ஸ் கிட்ஸ்களை அலறவிட்ட ஐந்து வில்லன்களை பற்றி பார்க்கலாம்.

ஆர்.பி.விஸ்வம்: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன் ஆர்.பி.விஸ்வம். நடிகர் திலகம் சிவாஜி கணேசனே இவரை பிளாக் கோப்ரா என பாராட்டி இருக்கிறார். அறுவடை நாள் என்னும் படத்தில் ” ஊர் நாய எல்லாம் வர சொன்னா வீட்டுக்கு ஒரு நாய் வந்து இருக்கு” என ஒரு வசனம் பேசி இருப்பார். அதிக சத்தம் இல்லாமல் எதிரில் இருப்பவர்களை ஏற இறங்க பார்த்துவிட்டு முனங்குவது போல் இவர் பேசும் வசனங்கள் பெரிய அளவில் பயத்தை கொடுக்கும். சின்ன ஜமீன் படத்தில் தன்னுடைய வில்லத்தனத்தின் உச்சத்தை காட்டி மிரட்டி இருப்பார்.

ராமி ரெட்டி: தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என எல்லா மொழிகளிலும் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டியவர் தான் ராமி ரெட்டி. 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படமான அம்மன் படத்தில் இருளான பேக்ரவுண்டில் ஜண்டா என இவர் கொடுக்கும் சவுண்டு அப்போது டிவியில் படம் பார்ப்பவர்களை அலற விட்டிருக்கிறது. நரபலி கொடுக்க முடியாமல் சௌந்தர்யா இவரை தடுத்து விடுவதால் அந்தப் படத்தில் அடுத்தடுத்து இவர் செய்யும் சூழ்ச்சிகள் இப்போது பார்த்தாலும் திகிலை கொடுக்கும்.

Also Read:நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக கொண்டாடப்படும் 5 வில்லன்கள்.. தெய்வமாக கை கொடுத்த அருந்ததி பசுபதி

சலீம் கோஸ்: சலீம் கோஸ் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தில், சர்க்கரை கவுண்டராக தன்னுடைய வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார். விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் வேதநாயகம் என்னும் கேரக்டரில் வாழ்ந்து இருப்பார். வேதநாயகம்னா பயம் என்று இவர் அடிக்கடி சொல்லும் இந்த வசனம் பெரிய அளவில் பிரபலமானது.

ராஜன் பி.தேவ்: ராஜன் பி.தேவ் தமிழ் சினிமாவில் நல்ல படங்களில் நடித்திருந்தாலும், முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் லவ் டுடே படத்தில் சுவலட்சுமியின் அப்பாவாக வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார். அவருடைய பன்முக திறமை கொண்ட நடிப்பிற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக பார்க்க வேண்டிய படம் என்றால் நடிகர் பார்த்திபனுடன் இவர் இணைந்து நடித்த வாய்மையே வெல்லும் படம் தான்.

பாலாசிங்: நடிகர் பாலாசிங் பெரும்பாலும் உலகநாயகன் கமலஹாசனின் படங்கள் அதிகமாக நடித்திருக்கிறார். இவருடைய வில்லத்தனமான நடிப்பிற்கு மிகப்பெரிய உதாரணம் புதுப்பேட்டை படத்தில் இவர் நடித்த அன்பு கேரக்டர் தான். அது மட்டுமில்லாமல் வேட்டைக்காரன், மதராசபட்டினம் போன்ற படங்களிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read:நெப்போலியன் மிரட்டிய 5 வில்லன் கதாபாத்திரம்.. எஜமானுக்கு தண்ணீர் காட்டிய வல்லவராயன்

Trending News