வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பிரச்சனைல மாட்டிவிடும் 5 விஷயங்கள்.. இதுக்கு சரின்னா அடுத்த முதல்வர் விஜய் தான்

5 things Vijay will get into trouble after entering politics: வந்தாரை வா என்று வரவேற்கும் அரசியல் வந்த பிறகு, ஆட்டி வைத்து விடுகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் அரசியலில் வந்து பெரும் புகழை சம்பாதிப்பதையே தனது அடுத்த இலக்காக கொண்டுள்ளனர். சாதிப்பதற்கு என்றே திரையில் கால் பதிக்கும் தலைமுறைகளை வம்படியாக இழுத்துப் போட்டு விடுகிறது இந்த அரசியல். இதற்கு விஜய்யும் விதிவிலக்கு அல்ல.

ரொம்ப காலமாக அரசியலுக்கு வருவதை இழுத்து அடித்த விஜய், கடந்த சில ஆண்டுகளாக பலமான அச்சாரத்தை போட்டு ஒரு வழியாக தனது கட்சி, தமிழக வெற்றி கழகம் என்பதை அதிரடியாக அறிவித்து விட்டார் விஜய். இதோடு முடிந்து விட்டதா? இனி தானே ஆரம்பிக்க வேண்டும் தனது அரசியல் ஆட்டத்தை.

மக்களுக்கு சேவை செய்வதற்கு என்று களத்தில் இறங்கும் நல்ல உள்ளங்களை, இந்த அரசியல் நல்லது செய்ய விடுவதில்லை என்பதே உண்மை. நல்லது செய்வதையே அரசியல் ஆக்கி, அவர்களை வம்பில் மாட்டி விடுவதும் உண்டு. உதாரணமாக எல்கேஜி திரைப்படத்தில் நாயகனுக்கு உங்களுக்கு எந்த ஸ்வீட்  பிடிக்கும்? என்ற கேள்வியுடன் சாதாரணமாக ஆரம்பித்து நீங்க காவிக்கு சப்போட்டா? வாரிசு அரசியலா? நெப்போட்டிசமா? சூதாட்டமா? என சிதைத்து நீங்கள் தமிழனே கிடையாது! இந்தியனே கிடையாது! என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

Also read: அடுத்த அரசியல் கட்சிக்கு தயாராகும் ஹீரோ.. விஜய்யை பின் தொடரும் வாரிசு நடிகர்

நாம் செய்கின்ற நல்ல செயல் ஒவ்வொன்றுக்கும் கேள்வி கேட்டு, அதை ஏண்டா செய்தோம் என்கிற அளவுக்கு உசுப்பேத்தி விடுவது இந்த அரசியல். முதலில் ஜோசப் விஜய், இதை வைத்தே அரசியல் ஆக்கலாம். இரண்டாவதாக என்ன பிராப்ளம் வந்தாலும் வாய்ஸ் கொடுக்கணும். நம்ம தலைவர் ஏற்கனவே கம்முனு இருப்பாரு. அவர் கம்முனு இல்லாம ரசிகர்களையும் கம்முனு இருக்க சொல்லுவாரு இவர் வாய்ஸ் கொடுப்பாரா?

அடுத்ததாக விஜய் இது நாள் வரை நடித்த படங்களில் உள்ள காட்சிகளை தூசு தட்டி எடுத்து அதை வைத்துக் கூட அசிங்கப்படுத்தலாம். எந்த பிரச்சனை வந்தாலும் வெளியே வந்து மக்களை சந்திக்க வேண்டும். “முடியாது” என்று சொல்ல முடியாது.

அப்பா அம்மாவை தனியாக தவிக்க விட்டது, விஜய் ஆப் என எதையும் வைத்து அசிங்கப்படுத்த ஆரம்பிக்கலாம். எதற்கும் தயாராக இருந்தால் மட்டுமே தேர்தலையும் மக்களையும் எதிர்கொள்ள முடியும். “கப்பு முக்கியம் தான் பிகிலு” ஆனால் அந்த கப்பை சுமக்க கனத்த இதயத்துடன் கூடிய துணிவு மிக அவசியம். முதல்வன் படத்தை போல் ஊழலை ஒழிப்பேன்! மக்களுக்கு சேவை செய்வேன்! என்று குரல் கொடுக்க போய், கடைசியா என்னையும் அரசியல்வாதியாக ஆக்கிட்டீங்களே! என்று அக்மார்க் அரசியல்வாதியாக ஆகாமல் இருந்தால் சரிதான்.

மக்கள் பெரும்பாலானோர் தமிழகத்திற்கு மாற்றம் வேண்டும் என வேண்டுவது உண்மையே! ஊழலற்ற நேர்மையான தங்கத் தலைவன் தளபதி முதல்வர் ஆவது மக்கள் அனைவருக்கும் சந்தோசமே! இருந்தாலும் இந்த அரசியல், தளபதியை சின்னாபின்னமாக்காமல் இருந்தால் நன்மையே!

Also read: கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்து சொன்ன 5 பிரபலங்கள்.. சக அரசியல்வாதியாய் வரவேற்ற கமல்

Trending News