வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நகைச்சுவை மட்டுமில்லை பாட்டிலும் பலே கில்லாடி.. வடிவேலு பாடகராக ஜொலித்த 5 பாடல்கள்

நகைச்சுவை மன்னன் வடிவேலு தன்னுடைய தென் மாவட்ட வட்டார பேச்சு கலந்த வசனங்களோடு, உடல் பாவனைகளை வைத்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். இவருடைய காமெடிக்கு இணையாக அதன் பின்னர் எந்த நடிகர்களும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஒரு நகைச்சுவை நடிகன் என்பதை தாண்டி வடிவேலு சிறந்த பின்னணி பாடகர் ஆகவும் தன்னை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தி இருக்கிறார்.

எட்டணா இருந்தா: 1995 ஆம் ஆண்டு ராஜ்கிரன் மற்றும் சங்கீதா நடிப்பில் வெளியான திரைப்படம் எல்லாமே என் ராசாதான். இந்த படத்தில் ஒரு சின்ன ரோலில் வடிவேலு வந்திருந்தாலும் அந்த காட்சியில் அனைவரையும் சிரிக்க வைத்திருப்பார். மேலும் அந்த படத்தில் பாடிய எட்டணா இருந்தா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது . இந்த பாடலை பாடி அவரே நடித்திருந்தார்.

Also Read:படப்பிடிப்பிலேயே தனுஷை அசிங்கப்படுத்திய வடிவேலு.. ஓவர் ஆட்டத்தால் பறிபோன பட வாய்ப்பு

சந்தன மல்லிகையில்: ராஜகாளியம்மன் திரைப்படத்தில் வடிவேலு கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் அவருக்கு நிறைய சென்டிமென்ட் காட்சிகளும் இருக்கும். அதே நேரத்தில் அவர் பாடிய சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் என்னும் பாடல் இன்றுவரை ஒலிக்காத கோவில்களே இல்லை என்று சொல்லலாம்.

காதல் பண்ண: ஹரி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த கோவில் திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் அத்தனையுமே இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்த படத்தில் காதல் பண்ண திமிரு இருக்கா என்னும் பாடலை நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடன் இணைந்து வடிவேலு பாடியிருப்பார். இவருடைய குரலில் அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

Also Read:கெட்ட எண்ணத்தோடு தூபம் போட்ட வடிவேலு.. ஒரே வார்த்தையால் வாயை மூட செய்த விவேக்

வாடி பொட்ட புள்ள வெளியே: நாட்டுப்புற பாடல் மற்றும் இன்னிசை பாடல் என்று இல்லாமல் வடிவேலு ஒரு கானா பாடகர் ஆகவும் வெற்றி கண்டிருக்கிறார். காலம் மாறிப்போச்சு என்னும் திரைப்படத்தில் இசைத்தென்றல் தேவா இசை அமைப்பில் இவர் பாடிய வாடி பொட்ட புள்ள வெளியே என்னும் கானா பாடல் இன்றுவரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

ராசா கண்ணு: நீண்ட வருடங்களுக்குப் பிறகு வடிவேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு மாமன்னன் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடிய ராசா கண்ணு பாடல் தான். ரொம்பவும் சீரியஸாக போகும் இந்த பாடலின் வரிகளை வடிவேலுவின் குரலில் கேட்கும் பொழுது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரவழைப்பதாக விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

Also Read:வடிவேலுவினால் சீரழிந்த 6 நடிகைகளின் வாழ்க்கை.. உண்மையை போட்டு உடைத்த பயில்வான்

Trending News