5 Top Actors and Actresses Secret Tattoo: திரைத் துறையில் இருக்கும் பிரபலங்கள் சீக்ரெட்டாக என்ன செய்ய நினைத்தாலும் அது எப்படியாவது வெளியில் வந்துவிடும். அதிலும் டாப் 5 நடிகர் நடிகைகள் ரகசியமாக குத்தி இருக்கும் டாட்டூஸ் என்ன என்பதை பார்ப்போம்.
ராஷ்மிகா மந்தனா: தென்னிந்திய நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, வாரிசு படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார். இவர் தன்னுடைய வலது கையில் ‘Irreplaceable’ என்ற ஆங்கில வார்த்தையை பச்சை குத்தி இருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா டாட்டூ

Also Read: நிம்மதியை தேடி ஊர் ஊராக சுற்றும் சமந்தா.. கடைசியில் சாமியாரிடம் சரணடைந்த புகைப்படம்
ஸ்ருதிஹாசன்: உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், முதலில் பாடகியாகவும் அதன் பிறகு டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகையாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். தற்போது தமிழைக் காட்டிலும் தெலுங்கு படங்களில் நிறைய பட வாய்ப்புகள் பெற்று நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் தன்னுடைய உடம்பில் மொத்தமாக ஐந்து டாட்டூஸ் குத்தி இருக்கிறார். அதிலும் தன்னுடைய சீக்ரெட் டாட்டூவாக முதுகு புறத்தில் ‘ஷ்ருதி’ என்று தமிழில் எழுதப்பட்ட அவரது பெயரை பச்சை குத்தி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், ‘தமிழ் மீது இவருக்கு இவ்வளவு பற்றா!’ என்று ஆச்சரியப்படுகின்றனர்.
ஸ்ருதிஹாசன் சீக்ரெட்டான டாட்டூ

Also Read: மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய 5 பிரபலங்களின் விவாகரத்து.. சமந்தாவை விட ஷாக் கொடுத்த பிசின் நடிகை
விக்ரம்: தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக இருக்கும் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் மிரட்டலான கெட்டப்பில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தனது கையில் பேண்ட் சுற்றி இருப்பது போல் ட்ரைபல் சிம்பிள் கொண்ட சூரியனை பச்சை குத்தி இருக்கிறார்.
விக்ரம் சன் பேண்ட் டாட்டூ

சமந்தா: தென்னிந்திய நடிகையான சமந்தா தெலுங்கில் டாப் நடிகராக இருக்கக்கூடிய நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது விவாகரத்து பெற்றுவிட்டனர். ஆனால் சமந்தா தன்னுடைய முன்னாள் கணவர் நாக சைதன்யா உடன் காதலில் இருந்தபோது Chay என்ற தன்னுடைய காதலனின் பெயரை தனது வலப்பக்க விலா எலும்பு பகுதியில் பச்சை குத்தி இருக்கிறார்.
கணவரின் பெயரை பச்சை குத்திய சமந்தா

Also Read: நம்ம நடிகர்களை ஓரம் கட்ட வரும் 5 அக்கட தேசத்து ஹீரோக்கள்.. ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்: தெலுங்கில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இவர் தன்னுடைய மனைவி ஸ்ரேயா ரெட்டியின் பெயரை தன்னுடைய இடது மணிக்கட்டில் பச்சைக் குத்தி இருக்கிறார். அவரது மனைவியும் அர்ஜுன் என கணவரின் பெயரை தன்னுடைய விரலில் பச்சை குத்தி இருக்கிறார்.
அல்லு அர்ஜுன் டாட்டூ
