வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அரசியலில் இறங்கி விளையாட துடிக்கும் 5 ஹீரோக்கள்.. தேவ இல்லாத மொத்த வித்தையையும் கத்துள்ள விஷால்

Actor Vishaal: தென்னிந்தியாவை பொறுத்த வரைக்கும் அரசியல் மற்றும் சினிமா எப்போதுமே தனித்தனியாக பார்க்கப்படுவதில்லை. சினிமாவை சேர்ந்தவர்கள் அரசியல் களம் கண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஹீரோவுக்கு தொடர்ந்து நாலு படங்கள் ஹிட் அடித்தாலே அவருடைய ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைப்பது என்பது இயல்பான ஒன்றாகி விட்டது. இந்த ஐந்து முன்னணி ஹீரோகளுக்கு அரசியலில் களம் காண ஆசை இருக்கிறது.

விஜய்: தளபதி விஜய் அரசியலுக்கு வருவது என்பது கிட்டத்தட்ட உறுதியான விஷயமாக பார்க்கப்படுகிறது. அவருடைய அடுத்த கட்ட நகர்வுகளும் தேர்தலை நோக்கி தான் இருக்கிறது. ஆடியோ லான்ச் அரசியல் தொடங்கி தற்போது கல்வி விருது வழங்கும் விழா வரைக்கும் தளபதியின் அரசியல் இப்போது மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது.

Also Read:இந்தியளவில் ட்ரெண்டாகும் ஆபரேஷன் விஜய்.. நம்ம தளபதின்னு போய் பார்த்தா இது வேற மாதிரி புல்லரிக்க வைக்குதே

சூர்யா: நடிகர் சூர்யா காப்பான் திரைப்பட சமயத்தில் நீட் அரசியலை கையில் எடுத்தது அனைவரும் அறிந்து ஒன்றுதான். அவரை பிஜேபி கட்சியில் இருந்தும் அணுகியிருந்தார்கள். சூர்யாவும் கிட்டத்தட்ட அரசியலுக்கு வருவது போல் தான் இருந்தார். ஆனால் அந்த சமயத்தில் நடிகை ஜோதிகா ஒரு விழாவின் போது கோயில்களுக்கு செய்வதை மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு செலவு செய்யுங்கள் என்று பேசிய விஷயம் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஆகியதால் சூர்யா அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார்.

சிவகார்த்திகேயன்: நடிப்பில் தொடங்கி தயாரிப்பு வரைக்கும் சினிமாவில் எல்லாத் துறையையும் முயற்சி செய்து பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர்தான் அடுத்த ரஜினி என்று பேசும் அளவிற்கு வளர்ந்து விட்ட சிவாவுக்கு அரசியல் ஆசையும் இருக்கிறது. சமீபத்தில் ஒரு விழாவின் தற்போது இது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சிரித்து மழுப்பி விட்டார்.

Also Read:அடுத்த முதல்வரா? என்னப்பா தளபதிக்கு பீதியை கிளப்புறீங்க! கிழித்து தொங்கவிட்ட ஹீரோவின் அப்பா

விஷால் : நடிகர் விஷால் செய்யும் அத்தனை விஷயங்களிலுமே அரசியல் தான் இருக்கிறது. ஆனால் அது பெரிதாக யாராலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. நடிகர் சங்க தேர்தலிலேயே தான் கத்து வைத்த அத்தனை அரசியல் வித்தையையும் மொத்தமாக இறக்கினார். கற்று தேர்ந்த அரசியல்வாதிகளே தோற்று விடும் அளவுக்கு பெர்பார்மன்ஸ் பண்ணியிருந்தார். இவருக்கு அரசியல் ஆசையும் இருக்கிறது.

தனுஷ்: நடிகர் தனுஷ் ஆரம்பத்திலிருந்து ஏனோதானோவென்று இருந்தாலும், அதன் பின்னர் அப்படியே ரஜினியை பாலோ செய்ய ஆரம்பித்து விட்டார். விவாகரத்திற்கு பிறகும் வேஷ்டி சட்டை, கோவிலுக்கு செல்வது என தன்னை நேர்த்தியாக ரசிகர்களிடம் காட்டிக் கொள்கிறார். தனுஷ் ஆன்மீக அரசியல் என்று களமிறங்குவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

Also Read:விஜய் அரசியலுக்கு வந்தால் விளைவுகள் வேற மாதிரி இருக்கும்.. உங்க கப்பலே கவுந்து கிடக்கு இதுல இப்படி உருட்டா!

Trending News