வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லயோலா கல்லூரியில் பயின்ற 5 டாப் ஹீரோக்கள்.. அப்பாவை சிபாரிசுக்கு கூட்டி சென்ற ரோலக்ஸ்

என்னதான் சினிமாவில் பிரபலங்களாக இருந்தாலும் அவர்களின் கல்வி தகுதி என்னவா இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழ தான் செய்கிறது. அந்த வகையில் லயோலா கல்லூரி என்றாலே நம் நினைவுக்கு வருவது சினிமா பிரபலங்கள் தான். அந்த அளவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் அக்கல்லூரியில் படித்திருக்கிறார்கள். மேலும் அந்த கல்லூரியில் பயின்ற தென்னிந்தியாவின் பிரபல டாப் ஐந்து ஹீரோக்களின் கல்வித்தகுதியை பற்றி இங்கு காணலாம்.

விஜய்: இவர் தன் பள்ளி படிப்பினை முடித்தவுடன் லயோலா காலேஜில் விஸ்காம் பட்டம் பெற்றார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் அப்படிப்பினை நடுவிலே விட்டு விட்டு தன் சினிமா பயணத்தை தொடங்கினார். மேலும் தன் திறமையால் முன்னேறி இன்று ஒரு பிரபல ஹீரோவாக மாறி மக்கள் மத்தியில் தளபதி என்ற பெயரை சம்பாதித்துள்ளார். இன்று சினிமாவில் இவரை தெரியாதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு வளர்ந்து நிற்கின்றார்.

Also Read:ரோலக்ஸ் கௌரவத் தோற்றத்தில் நடித்து வெளிவந்த 8 படங்கள்.. த்ரிஷாவுடன் குத்தாட்டம் போட்ட சூர்யா 

சூர்யா: இவரின் கல்வி தகுதியாக பார்க்கையில் லயோலா காலேஜில் பி காம் முடித்துள்ளார். அக்கல்லூரியில் இவர் சேர்வதற்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாம். ஏனென்றால் அவருடைய தந்தை நடிப்பு துறையில் இருப்பதால் எங்கு படிப்பினை பாதியிலேயே விட்டு விடுவாரோ என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. அதனால் அப்பாவை சிபாரிசுக்கு கூட்டிச் சென்று சீட்டு வாங்கி இருக்கிறார் இந்த ரோலக்ஸ்.

விஷால்: சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் விஷால். இவர் லயோலா காலேஜில் இங்கிலீஷ் லிட்ரேச்சர் படித்துள்ளார். அதன்பின் முதுகலை பட்டமான எம் பி ஏ வும் அக்கல்லூரியிலேயே முடித்துள்ளார். அதன் பிறகு தான் இவர் நடிப்பு துறைக்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

Also Read:விஷாலை போல மோசடியில் சிக்கி சின்னாபின்னமாகும் கோழி இயக்குனர்.. 6 மாத சிறை தண்டனை உறுதி

மகேஷ்பாபு: பல திறமைகள் கொண்ட இவர் தற்பொழுது தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் தன் கல்லூரி படிப்பினை லயோலா கல்லூரியில் தான் தொடங்கினார். அங்கே பி காம் படித்து வந்த இவரால் அதிகமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கொஞ்சம் அரியர் வைத்திருக்கிறார். அதன் பின் இவருக்கு நடிப்பின் மீது கொண்ட ஈர்ப்பால் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் பல படங்களில் வாய்ப்பு பெற்ற இவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு நடிகராக இருக்கிறார்.

ஜெயம் ரவி: பொன்னியின் செல்வனான ஜெயம் ரவி லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். அதன் பின் இவர் மும்பையில் சிறிது காலம் பணிபுரிந்தார். பிறகு தான் சினிமாவில் துணை இயக்குனராக அறிமுகமானார். கமல் நடிப்பில் வந்த ஆளவந்தான் திரைப்படத்தின் துணை இயக்குனராக இவர் பணிபுரிந்துள்ளார். அதைத்தொடர்ந்து இன்று சினிமாவில் ஒரு வெற்றி நாயகனாக இருக்கிறார்.

Also Read:ஜெயம் ரவிக்கு மிகபெரிய வெற்றி குடுத்த 5 படங்கள்..

Trending News