வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரே வருடத்தில் அறிமுகமாகி கல்யாணத்தால் காணாமல் போன 5 நடிகைகள்.. 20 வருஷமா சொல்லியடிக்கும் திரிஷா!

Actress Simran: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகள் ஐந்து பேர் ஒரே காலகட்டத்தில் அறிமுகமாகி, மிகப்பெரிய அளவில் வெற்றியும் அடைந்தனர். இவர்களுக்கு ரசிகர்களிடையே இன்று வரை நல்ல வரவேற்பும் இருக்கிறது. மேலும் இந்த நடிகைகள் இயற்கையான அழகுடனும், குடும்பப் பாங்கான கேரக்டர்களிலும் நடித்து வெற்றி பெற்றவர்கள்.

சிம்ரன்: சிம்ரன் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இன்று வரை இவர் அளவுக்கு டான்ஸ் ஆடும் கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் இல்லை. 2000 வருடத்தில் மற்ற கதாநாயகிகளை விட அதிகமாக சம்பளம் வாங்கியவர் இவர். கிட்டத்தட்ட 75 லட்சம் வரை சம்பளமாக வாங்கினார். திருமணத்திற்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த இவரால் விட்ட மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை.

Also Read:40 வயதில் ஜெயித்த 3 நடிகைகளை ஃபாலோ பண்ணும் நயன்தாரா.. சுக்கிர திசையில் திரிஷா, அதிரடி முடிவில் நயன்

ஜோதிகா: 1999 ஆம் ஆண்டு வாலி திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டர் மூலம் அறிமுகமானவர் ஜோதிகா. இந்த படத்திற்கு பிறகு ஜோதிகா அடுத்தடுத்து வெற்றி படங்களிலேயே நடித்து வந்தார். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடி போட்டவர் இவர். திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா, 36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

திரிஷா: 1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் திரிஷா. அதன் பின்னர் கிட்டத்தட்ட பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த இவர், கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் வெற்றி படங்களே இல்லாமல் இருந்தார் . அதன் பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக மாறி இருக்கிறார். மொத்தமாக மார்க்கெட் இழந்த பிறகு மீண்டும் நம்பர் ஒன் ஹீரோயினாக மாறி அதிலும் 20 வருடம் சினிமாவில் நிலைத்து நிற்கும் ஒரே நடிகை இவர்தான்.

Also Read:நாங்கள் ஒண்ணும் நயன்தாராவுக்கு சலச்சவங்க இல்ல.. 3 படங்களுடன் கெத்து காட்டும் நடிகை

சினேகா: நடிகை சினேகா 2000ஆண்டு விரும்புகிறேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயினாக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார். பல்வேறு டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் வருகிறார்.

நயன்தாரா: நயன்தாரா 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயினாக இருந்தார். ஆனால் நயன்தாராவிற்கு திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீபத்திய படமாக ஜவான் திரைப்படம் தான் இவருக்கு ரிலீசுக்கு காத்திருக்கிறது.

Also Read:பிரபல நடிகர் மீது தீராத காதல்.. கணவரையும் இழந்த பாடகியின் சீக்ரட்டை உடைத்த பயில்வான்

Trending News