வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

டச்சப் பாயிலிருந்து விஸ்வரூபம் கண்ட 5 நடிகர்கள்.. அஜித்துக்கே ஹிட் கொடுத்த இயக்குனர்

Actor Ajithkumar: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த ஐந்து நடிகர்கள், தங்களுடைய தொடக்க காலத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு டச்சப் பாயாக வேலை செய்து இருக்கிறார்கள். சினிமாவில் எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என்ற ஆசையில், கிடைத்த வேலையை செய்து கொண்டு, தனக்கான சந்தர்ப்பம் வரும் பொழுது அதை சரியாக பயன்படுத்தி, விஸ்வரூப வளர்ச்சியை பெற்றிருக்கிறார்கள்.

மயில்சாமி: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நகைச்சுவை கலைஞர்களில் மயில்சாமியும் ஒருவர். டச்சப் பாயாக வேலை பார்த்து கொண்டிருந்த இவர், ஒருநாள் நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜிடம் மிமிக்கிரி செய்து காட்டியிருக்கிறார். அதே நாளில் மயில்சாமிக்கு தாவணி கனவுகள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சின்னக் கலைவாணர் விவேக்குடன் இணைந்து தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கினார்.

Also Read:14 வருடங்கள் ஆகியும் தீராத பகை.. அவமானப்படுத்தியரிடமே அடைக்கலமா என வெளுத்து வாங்கிய அஜித்

மனோபாலா: இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு மிகப்பெரிய ஹிட் படமான ஊர்க்காவலன் திரைப்படத்தை கொடுத்தவர். தன்னுடைய இறுதி மூச்சு நிற்கும் வரை தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே இருந்த நடிகர் இவர். நடிகர்களுக்கு டச்சப் பாயாக வேலை செய்து கொண்டிருந்த இவர், இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் என்னும் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 1994 ஆம் ஆண்டு வெளியான தாய்மாமன் திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சயமானார்.

சின்னி ஜெயந்த்: நடிகர் சின்னி ஜெயந்த் 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர். முரளி, பிரசாந்த், அஜித் மற்றும் விஜய் போன்ற நடிகர்களுக்கு நண்பனாக பல படங்களில் நடித்திருக்கிறார். சினிமா கலைஞர்களுக்கு டச்சப் பாயாக வேலை செய்து கொண்டிருந்த இவர், 1984 ஆம் ஆண்டு வெளியான கை கொடுக்கும் கை திரைப்படத்தின் மூலம், இயக்குனர் மகேந்திரனால் அறிமுகப்படுத்தப்பட்டார். தன்னுடைய வித்தியாசமான வசன உச்சரிப்பின் மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கும் இவர், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து கண் கலங்க வைத்திருக்கிறார்.

Also Read:விடாமுயற்சியின் வில்லன் லிஸ்டில் இருக்கும் 5 நடிகர்கள்.. சிங்கத்தோட மோத சிறுத்தையை தேடும் மகிழ்

ரமேஷ் கண்ணா: நடிகர் ரமேஷ் கண்ணா 90ஸ் கிட்ஸ்களுக்கு ஃபேவரிட் காமெடியனாக நிறைய படங்களில் கலக்கியிருக்கிறார். நாடக பட்டறையில் பயிற்சி பெற்ற இவர், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு டச்சப் பாய் முதற்கொண்டு, கிடைத்த சின்ன சின்ன வேலைகள் எல்லாத்தையும் செய்தார். பாண்டியராஜன், கோடி ரமேஷ்கண்ணா, விக்ரமன் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் போன்ற முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்த இவர், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.

தம்பி ராமைய்யா: இயக்குனராக முயற்சி செய்த தம்பி ராமைய்யா இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு டச்சப் பாயாக வேலை செய்த இவர், சின்னத்திரை தொலைக்காட்சி சீரியல்களுக்கு வசனம் எழுதினார். பின்னர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த இவருக்கு, மைனா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தி நடிக்கக்கூடிய நடிகர் இவர். வில்லன், காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம் என அத்தனையிலும் சிறந்து விளங்குகிறார் தம்பி ராமைய்யா.

Also Read:ஆஸ்கருக்கு தயாராகும் அஜித்.. யாரும் எதிர்பார்க்காத புது அவதாரம் எடுக்கும் ஏ கே

Trending News