வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து விஜய் தோற்ற 5 படங்கள்.. பெரிய அடி கொடுத்த வில்லு படம்

Thalapathy Vijay: நடிகர் விஜய் பொருத்தவரைக்கும் கமர்சியலான மசாலா படங்கள்தான் பெரும்பாலும் கை கொடுக்கும். ரொம்ப ரிஸ்க் எடுத்து தோற்றத்தை மாற்றுவது, சென்டிமென்டான படங்களில் நடிப்பது என அவர் முயற்சி செய்தது கிடையாது. இருந்தாலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்ட வேண்டும் என விஜய் முயற்சி செய்து மிகப் பெரிய தோல்வி அடைந்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

விஜய் தோற்ற 5 படங்கள்

பிரியமுடன்: விஜய் மற்றும் கௌசல்யா நடிப்பில் 1998 ஆம் ஆண்டு ரிலீசான படம் தான் பிரியமுடன். இந்த படத்தில் விஜய் கௌசல்யாவை ஒருதலையாக காதலித்து, அவர் எப்படியாவது தன்னை காதலிக்க வேண்டும் என பொய்க்கு மேல் பொய், குற்றத்திற்கு மேல் குற்றம் என செய்வார். ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்த கௌசல்யாவின் அப்பாவை கொலை கூட செய்து விடுவார். விஜய்க்கு இதில் நெகட்டிவ் கேரக்டர் என்பதால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

கண்ணுக்குள் நிலவு: 2000 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கண்ணுக்குள் நிலவு படம் விஜய்க்கு 50வது படம் ஆகும். விஜய் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த காதலுக்கு மரியாதை படத்தின் கூட்டணி மீண்டும் இந்த படத்தில் இணைந்தது. இதில் நடக்காத ஒன்றை கற்பனை செய்து அதற்காக தன்னை வருத்திக் கொள்ளும் சைக்கோ கேரக்டரில் விஜய் நடித்திருந்தார். இந்த படம் படுதோல்வி அடைந்தது.

Also Read:விஜய் அரசியலுக்கு வந்ததால் ஏற்பட்ட நஷ்டம்.. ஆட்டம் காணப்போகும் திரையுலகம்

அழகிய தமிழ் மகன்: 2007 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் அழகிய தமிழ் மகன். விஜய் இந்த படத்தில் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்ததால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது. நிஜத்தில் நடக்க இருப்பது விஜய்க்கு கனவில் ஏற்கனவே தெரிவது தான் இந்த படத்தின் கதை. இந்த படம் விஜய்க்கு கை கொடுக்கவில்லை.

உதயா: துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் மற்றும் சிம்ரன் மீண்டும் இணைந்த படம் தான் உதயா. இந்த படத்தில் விஜய் அறிவியல் ஆராய்ச்சியாளராக நடித்திருப்பார். ரொம்ப சீரியசான இந்த திரைக்கதை விஜய்க்கு கை கொடுக்காததால் படம் வெற்றி பெறவில்லை.

வில்லு: விஜய் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் மிகப்பெரிய ஹிட் அடைந்த போக்கிரி படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் வில்லு படத்தில் இணைந்தது. இந்த படத்தில் விஜய்யின் நடிப்பு இதுவரை பார்க்காத அளவுக்கு ரொம்பவே வித்தியாசமாக இருக்கும் உண்மையை சொல்லைப் போனால் ரசிக்கும் படி இருக்காது. இந்த படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது . படப்பிடிப்பின் போது நயன்தாரா மற்றும் பிரபுதேவாவுக்கு இடையே மலர்ந்த காதல் தான் இந்த படம் மொத்தமாக சொதப்பியதற்கு காரணம் என்று கூட சொல்வார்கள்.

Also Read:அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த தளபதி.. ட்ரெய்லருக்கே விழி பிதுங்கும் பெரிய தலைகள்

- Advertisement -spot_img

Trending News