வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ராமராஜன் இயக்கி வெற்றி பெற்ற பொக்கிஷமான 5 படங்கள்.. கிராமத்து நாயகனாக ஜொலித்த மக்கள் நாயகன்

Ramarajan Direct movies: கிராமத்து படங்களில் நடித்து எதார்த்தமான நடிப்பை கொடுத்து தமிழ் சினிமாவில் மக்கள் நாயகன் என்று தனக்கென ஒரு பெயரை எடுத்தவர் தான் ராமராஜன். இவர் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்து வெற்றியை கொடுத்திருக்கிறார். அத்துடன் 10 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். அப்படி இவர் இயக்கி வெற்றி பெற்ற படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

மண்ணுக்கேத்த பொண்ணு: 1985 ஆம் ஆண்டு ராமராஜன் இயக்கி எழுதி பாண்டியன், இளவரசி, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மண்ணுக்கேத்த பொண்ணு. இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருக்கிறார். இப்படம் கிட்டத்தட்ட 100 நாட்கள் தாண்டி வெற்றி பெற்றது. முக்கியமாக இப்படத்தில் இருக்கும் காதல் மற்றும் காமெடிக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

மருதாணி: 1985 ஆம் ஆண்டு ராமராஜன் இயக்கத்தில் பாண்டியன், ஷோபனா, எஸ் எஸ் சந்திரன், கவுண்டமணி, செந்தில் நடிப்பில் மருதாணி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கும் கங்கை அமரன் தான் இசையமைத்து கொடுத்திருக்கிறார். எளிமையான கிராமத்து கதையாகவும், அதில் காதல் நகைச்சுவை படங்களுக்கு எந்த அளவுக்கு எதார்த்தம் இருக்கும் என்பதை அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கும். அந்தக் காலத்தில் இப்படம் மக்கள் மனதில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

Also read: விஜய் பண்ற வேலையெல்லாம் பார்த்தா கடைசில ராமராஜன் கதி தான்.. தலைவர பார்த்து திருந்துங்க ப்ளீஸ்!

அம்மன் கோயில் வாசலிலே: 1996 ஆம் ஆண்டு ராமராஜன் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் தான் அம்மன் கோவில் வாசலிலே. இதில் சங்கீதா, மணிவண்ணன், செந்தில், காந்திமதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருக்கிறார். அந்த காலத்தில் ஒரு கமர்சியல் சூப்பர் மெகா ஹிட் படமாக வெற்றி பெற்றது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பதற்கு ஏற்ப இப்படம் மக்கள் மத்தியில் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 75 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடியது. முக்கியமாக இதில் வரும் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எல்லாம் பறந்தது.

கோபுர தீபம்: ராமராஜன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து 1997 ஆம் ஆண்டு கோபுர தீபம் வெளிவந்தது. இதில் சுகன்யா, ஆர் சுந்தர்ராஜன், செந்தில், பாண்டு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த காலத்துல வர பாடலை என்ன பாடல் என்பதற்கு ஏற்ப படத்தில் உள்ள ஒரு பாடல் இன்றைக்கும் நெஞ்சில் நீங்கா வண்ணமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. “உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான், உன்னையும் என்னையும் பிரிச்சா உலகம் ஏதும் இல்லை” இதெல்லாம் தான் பாடல் வரிகள் என்பதற்கு ஏற்ப வைரமுத்து வரிகளால் செதுக்கி கொடுத்திருப்பார்.

விவசாய மகன்: 1997 ஆம் ஆண்டு ராமராஜன் இயக்கி ஹீரோவாக நடித்த படம் தான் விவசாய மகன். இதில் தேவயானி, கே ஆர் விஜயா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவருடைய நடிப்பில் வந்த படங்களை எல்லாம் பார்க்கும் பொழுது தான் அந்த காலம் எந்த அளவிற்கு பொற்காலமாக இருந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. அந்த அளவிற்கு நடிப்பிலும் எதார்த்தத்திலும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்.

Also read: நடிகையை மருமகளாக எங்க வீட்டில் ஏற்கமாட்டோம்.. பொண்டாட்டி நடிகைன்னு மறந்து கறாராக பேசிய ராமராஜன்.!

Trending News