வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

வடிவேலுவின் 5 மறக்க முடியாத கேரக்டர் பெயர்கள்.. மோடியே விசாரித்த கான்ட்ராக்டர் நேசமணி

5 Unforgettable Character Names of Vadivelu: சோசியல் மீடியாவில் உலாவும் மீம்ஸ்களில் வடிவேலுவின் கதாபாத்திரங்கள் தான் அதிகம் இருக்கும். அப்படி வைகைப்புயல் வடிவேலு நடித்த ஐந்து கேரக்டர்களின் பெயர்கள் இன்றும் யாராலும் மறக்கவே முடியாது. அதிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியே யார் இந்த கான்ட்ராக்டர் நேசமணி என்று விசாரித்திருக்கிறார்.

கைப்பிள்ளை: பேசுற டயலாக்கில் மட்டும் நகைச்சுவை இருப்பதை காட்டிலும் வடிவேலுவின் உடல் அசைவே ரசிகர்களுக்கு சிரிப்பு மூட்டும். அப்படிதான் பிரசாந்த், கிரண் நடிப்பில் வெளியான வின்னர் படத்தில் வடிவேலு கைப்பிள்ளை என்ற கேரக்டரில் நடித்தார். இந்தப் படத்தில் ஆக்ஷன்க்கு இணையாக வடிவேலுவின் நகைச்சுவை இருந்தது. இதில் வில்லன் கட்டதுரை தோப்பில் கைப்பிள்ளையை அழைத்து சென்று கும்மிய காட்சிகளில் வடிவேலு சொன்ன, ‘வேணா.. வலிக்குது.. அழுதுருவேன்..’ என்ற டயலாக் இப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

நாய் சேகர்: சுந்தர் சி நடித்த தலைநகரம் படத்தில் நாய் சேகர் என்ற கேரக்டரில் வடிவேலு நடித்தார். இந்த கேரக்டர் ரசிகர்களிடம் செம்ம ரீச் என்பதால், அதன்பின் வடிவேலு தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் அவர் ‘நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்!’ என்று போலீசுக்கு தண்ணி காட்டிய டுபாக்கூர் ரவுடியாக நீண்ட முடி, பொட்டு, மூக்கில் வளையம் என கெட்டப்பில் இருந்தார். இப்போது கூட எல்லோருக்குமே நாய் சேகர் என்றதுமே வடிவேலுவின் அந்த லுக் கண் முன் வந்து குபீர்னு சிரிப்பு வந்துவிடும்.

பேக்கரி வீரபாகு: அர்ஜுன், ரீமாசென் நடிப்பில் வெளியான கிரி படத்தில் பேக்கரி வீரபாகு என்ற காமெடியான கேரக்டரில் வடிவேலு நடித்தார். என்னதான் இந்த படத்தில் அர்ஜுன் வீரபாகுவை கழுவி கழுவி ஊற்றினாலும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பேக்கரி தான் முக்கியம் என்று அக்காவுக்கே மாமா வேலை பார்த்ததை ஒத்துக் கொள்வார். இப்போதும் பேக்கரி என்றால் சட்டென்று கிரி படத்தில் வடிவேலு நடத்திய பேக்கரி மற்றும் அது சம்பந்தப்பட்ட சீன்கள் தான் கண் முன் வரும்.

23ம் புலிகேசி: புலிகேசி மற்றும் உக்கிர புத்தன் என்ற இரண்டு கேரக்டரில் வடிவேலு நடித்த படம் தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இந்த படத்தில் 23ம் புலிகேசியாக வடிவேலு செய்த அக்கப்போர் கொஞ்ச நஞ்சமல்ல. புலவரின் மூக்கிற்குள் மிளகாய் பொடி போடுவது, தூது வந்த புறாவை சுட்டு தின்னுவது என புலிகேசி செய்த அழிச்சாட்டியத்திற்கு அளவே இல்லை. அதுவும் இவரது மீசை மீது இரண்டு மல்லிகை பூவை சொருகி இவரது லுக்கை பார்த்ததுமே சிரிப்பு வந்துவிடும்.

வடிவேலுவின் மறக்க முடியாத ஐந்து கேரக்டர்

கான்ட்ராக்டர் நேசமணி: வைகைப்புயல் வடிவேலுவின் கான்ட்ராக்டர் நேசமணி கேரக்டரை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் தான் கான்ட்ராக்டர் நேசமணி என்ற காமெடி கேரக்டரில் வடிவேலு நடித்தார். இதில் வேலையே தெரியாத அப்ரண்டீஸ் ஆன விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணாவை வைத்து  வேலை வாங்க முடியாமல்  கான்ட்ராக்டர் நேசமணி படாத பாடுபடுவார்.

இந்த படத்தில் ‘நீ ஆணியே புடுங்க வேண்டாம், நீ புடுங்குறது பூரா தேவையில்லாத ஆணி தான். தரையை துடைடா’ என அவர் சொன்ன டயலாக் இப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதோடு பிரதமர் நரேந்திர மோடியும் ஒருமுறை ஃபிரண்ட்ஸ் படத்தில் சோசியல் மீடியாவில் ரொம்பவே ட்ரெண்டிங்கில் இருந்த கான்ட்ராக்டர் நேசமணி கேரக்டரை பார்த்துவிட்டு, இவர் யாரு என்று  விசாரித்துள்ளார். அந்த அளவிற்கு இந்த கேரக்டர் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.

Trending News