வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

நிஜ அரசியல்வாதிகளுக்கு டஃப் கொடுத்த 5 ரீல் நடிகர்கள்.. எப்போதும் ஃபேவரிட் ஆக இருக்கும் அமாவாசை

Tamil Cinema Politician Characters: தமிழ் சினிமாவில் அவ்வப்போது அரசியல் சார்ந்த படங்கள் நிறைய ரிலீஸ் ஆகும். இதுபோன்ற அரசியல் பகடி படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் இருக்கும். ஆனால் அதில் ஒரு சில கேரக்டர்களே ரசிகர்கள் மனதில் அப்படியே நிலைத்து நின்று விடும். இந்த ஐந்து படங்களில் நடித்த அரசியல்வாதி கேரக்டர்கள் நிஜ அரசியல்வாதிகளே தோற்கடிக்கும் அளவுக்கு நடித்திருப்பார்கள்.

அமாவாசை: அந்த காலத்திலேயே அரசியலின் உண்மை நிலையை நக்கலும், நையாண்டியுமாக மணிவண்ணன் எடுத்த படம் தான் அமைதிப்படை. இதில் தேங்காய் சில்லுகளை பொறுக்கி தின்னும் அமாவாசை என்னும் கேரக்டர் நாகராஜசோழன் எம் எல் ஏ ஆன பிறகு நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை. இந்த படம் ரிலீஸ் ஆகி பல வருடங்கள் ஆகியும் அரசியலில் மற்றவர்களை நக்கல், நையாண்டி செய்ய இந்த கேரக்டர் தான் பயன்படுத்தப்படுகிறது.

Also Read:7 முறை தேசிய விருதை தட்டி பறித்த வைரமுத்து.. எந்தெந்த பாடல்களுக்கு தெரியுமா?

அரங்கநாதன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் திரைப்படத்தில் வரும் அரங்கநாதன் கேரக்டர் தன்னுடைய யதார்த்தமான நடிப்பிலேயே மிரட்டி இருப்பார். ரகுவரன் இந்த கேரக்டரில் அப்படியே வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பேட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் சட்டென ஒரு நாள் முதல் அமைச்சர் கான்செப்டை கொண்டு வந்து பட்டையை கிளப்பி இருப்பார் இந்த சிஎம்.

வசந்தன்: மாணவர்கள் அரசியலுக்கு வருவது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்திய திரைப்படம் இது. பத்திரிக்கையும், சிறந்த அரசியல்வாதியும் இணைந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை இந்த படம் சொல்லி இருக்கும். அரசியல் மாற்றத்தை இலட்சியமாகக் கொண்டு வரும் மாணவனைக் கூட அரசியல் மாற்றும் தன்மை உடையது என்பதையும் இந்த படத்தில் வசந்தன் கேரக்டர் பேசி இருக்கும்.

Also Read:ரகுவரன் ஹீரோவாக முத்திரை பதித்த 5 படங்கள்.. கதாபாத்திரத்திற்காக பழகிய கேடுகெட்ட பழக்கம்

லால்குடி கருப்பையா காந்தி: ஆர் ஜே பாலாஜி முதன் முதலில் ஹீரோவாக நடித்த திரைப்படம் எல் கே ஜி. இந்த படத்தில் நவீன அரசியலை எந்த அளவுக்கு காமெடியாக சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சொல்லி இருப்பார்கள். இதில் பாலாஜி லால்குடி கருப்பையா காந்தி என்னும் அரசியல்வாதியாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

காளை பாண்டியன்: சீயான் விக்ரம் நடிப்பில் அதிரடி திரைப்படமாக வெளியானது தான் தூள். இதில் சாயாசி ஷிண்டே அமைச்சர் காளை பாண்டியனாக நடித்திருப்பார். சொர்ணாக்கா என்னும் ரவுடியின் உதவியோடு ஆட்சியைப் பிடிக்கும் இந்த காளை பாண்டியன் அந்த ரவுடிக்காகவும், தன் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் செய்யும் தில்லு முல்லு வேலைகள் காமெடியுடன் சேர்ந்து மிரட்டி இருக்கும்.

Also Read:மலையாளத்தில் அமோக கலெக்சன்.. காசு மழை கொட்டும் என ரீமேக் செய்து மண்ணை கவ்விய 5 படங்கள்

- Advertisement -spot_img

Trending News