வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சரத்குமார் நடிப்பில் மறக்க முடியாத 5 கிராமத்து படங்கள்.. ஒரே பாட்டில் ஓஹோன்னு வந்த சூர்யவம்சம்

Actor Sarath Kumar: தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்பினை கொண்டு, வில்லனாய் அறிமுகமானவர் சரத்குமார். தெலுங்கு படங்களில் சப்போர்ட்டிங் ஆக்டராய் நடித்துக் கொண்டிருந்த இவர் தமிழில் சுப்ரீம் ஸ்டாராய் வலம் வந்தார்.

அதைத் தொடர்ந்து தன் கட்டுக்கோப்பான உடல் அமைப்பால் வில்லன் கதாபாத்திரம் மற்றும் ஆக்சன் நிறைந்த படங்களில் நடித்து வந்தார். இன்று 69 வது பிறந்தநாள் காணும் இவரின் மறக்க முடியாத 5 கிராமத்து படங்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: ஜொலிக்க முடியாமல் போன வெற்றி பட நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷ் போல் வளர முடியாத ஹீரோயின்

நாட்டாமை: 1994ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நாட்டாமை. இப்படத்தில் சரத்குமார், மீனா, குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள். அதுவும் இரட்டை கதாபாத்திரம் ஏற்று நாட்டாமையாகவும், நாட்டாமையின் தம்பியாகவும் சிறப்புற நடித்திருப்பார். இப்படம் 175 நாட்கள் ஓடி மாபெரும் ஹிட் கண்டது. மேலும் இப்படம் சரத்குமாரின் பேர் சொல்லும் படமாக மாறியது.

சூரியவம்சம்: 1997ல் விக்ரமன் இயக்கத்தில் கிராமத்தை தழுவிய படமாய் வெளிவந்த இப்படத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தந்தையின் வாக்குக்கு எதிர்மறையாய் செயல்பட்டு அதன் பின் பாசத்தை வெளிப்படுத்தும் கதை அம்சம் கொண்டு செல்லப்பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக ஒரே பாடலில் முன்னேறிய இவரின் வெற்றியை பேசும் படமாக, சிறந்த கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.

Also Read: பொன்னியின் செல்வன், பாகுபலியை மிஞ்ச வரும் வரலாறு.. கனவை நினைவாக்க வரும் இயக்குனர்

நட்புக்காக: 1998ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நட்புக்காக. இப்படத்தில் சரத்குமார், சிம்ரன், விஜயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் இடம்பெறும் சின்னையா, பெரியய்யா கதாபாத்திரம் ஏற்ற விஜயகுமார் மற்றும் சரத்குமாரின் நடிப்பு சிறப்புற அமைந்திருக்கும். சரத்குமாரின் 75வது படமான இப்படம் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்று தந்தது.

பாட்டாளி: 1999ல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பாட்டாளி. இப்படத்தில் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தன்னை வளர்த்தவர்களின் நன்றியை மறக்காது நேர்மையான கதாபாத்திரத்தில் சிறப்புற நடித்திருப்பார் சரத்குமார். இப்படத்தில் இரு ஹீரோயின்களுடன் இவர் இணைவது போன்று கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். மேலும் இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று, வணிக ரீதியான வெற்றியை கண்டது.

Also Read: கவர்ச்சி எல்லாம் ஒரு விஷயமே இல்லை.. சிம்ரனின் இடுப்பை ரசித்த நடிகை

சமுத்திரம்: 2001ல் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமார் கூட்டணியில் வெளிவந்த படம் தான் சமுத்திரம். இப்படத்தில் முரளி, காவேரி, அபிராமி, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதமாய் கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். மேலும் படத்தில் மனதை உருக்கும் தங்கை சென்டிமென்ட் மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது. இப்படமும் இவரின் நடிப்பில் பெயர் சொல்லும் படமாக அமைந்தது.

Trending News