சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

வயிறு குலுங்க சிரிக்க வைத்து பெயர் தெரியாமல் போன 5 காமெடியன்ஸ்.. 100 படங்களுக்கு மேல் நடித்த சாம்ஸ்

5 Comedy Actors: தமிழ் சினிமாவில் தற்போது காமெடிக்கான கதாபாத்திரத்துக்கு ஏற்ற ஒரு நகைச்சுவை நடிகர் யாரும் நிரந்தரமாக இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையில் எத்தனையோ சின்ன சின்ன காமெடி நடிகர்கள் வந்துட்டு போயிருந்தாலும் அவர்களை தேடி எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் பல படங்களின் மூலம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பெயர் தெரியாத காமெடி நடிகர்களை நினைவு கூர்ந்து பார்க்கலாம்.

ஹலோ கந்தசாமி: இவர் கிட்டத்தட்ட 18 படங்களில் சைடு காமெடியனாக நடித்திருக்கிறார். ஆனாலும் சரியான அங்கீகாரம் இல்லாமல் மக்களிடம் பரிச்சயம் இல்லாமலே போய்விட்டார். அப்படி இவர் நடித்த கதாபாத்திரங்கள் என்னவென்றால் சாட்டை படத்தில் செவிட்டு வாத்தியாராக வருவார். வீரம் படத்திலும் ஒரு கூலித் தொழிலாளியை சுருக்கு கயிற்றில் மாற்றி தொங்க விடுவார்களே, அந்த தொழிலாளியாகவும் வந்திருப்பார். இப்படி இவர் நடித்த படங்கள் நிமிர்ந்து நில், மைனா, வாகை சூடவா, குட்டி புலி, வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

டி.எம். கார்த்திக்: இவரே ராகேஷ் என்று சொன்னால் ஓரளவுக்கு ஞாபகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் நடித்தும் ரசிகர்களுக்கு இவர் பெயர் பெருசாக தெரியும் படி இவர் பிரபலமாகவில்லை. இவர் நண்பன் படத்தில் இலியானாவுக்கு வீட்டில் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளை ராகேஷ் ஆக வந்து நடித்திருப்பார். அத்துடன் ராஜா ராணி, தெய்வத்திருமகள், மதராசபட்டினம், தில்லுக்கு துட்டு, விசுவாசம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

Also read: அழகுக்காக சர்ஜரி செய்து பொம்மை போல் மாறிய 5 நடிகைகள்.. ஆபத்தில் முடிந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை

பகவதி பெருமாள்: இவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்களிடம் நல்லாவே ரீச் ஆகியது. ஆனாலும் தொடர்ந்து இவருக்கான வாய்ப்பு வராததால் தட்டு தடுமாறிக் கொண்டு வருகிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், பிச்சைக்காரன், ஜிகர்தண்டா, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து இவருடைய திறமையை நச்சென்று வெளி காட்டி இருக்கிறார்.

சாம்ஸ்: 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் எதாவது சாதித்து விட வேண்டும் என்று காமெடி ட்ராக்கை கையில் எடுத்துக்கொண்டு 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஆனாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பில் மட்டும் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் ராஜாதி ராஜா, எந்திரன், மனம் கொத்தி பறவை, சிங்கம் 3, பேரழகன், காஞ்சனா 2 போன்ற பல படங்களில் நடித்து வந்திருக்கிறார்.

டிஎஸ்ஆர் தர்மராஜ்: இவர் கிட்டதட்ட 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவரை பார்க்கும் பொழுது எப்பொழுதும் சிரிச்சு முகமாக சிரிச்சி கொண்டே இருக்கக்கூடியவர். இவர் நடித்த படங்களான மூக்குத்தி அம்மன், சர்தார், அயலி, பிகில் போன்ற பல படங்களில் நடித்து வந்திருக்கிறார். ஆனாலும் இவருடைய பெயர் கேட்டால் யாருக்கும் தெரியாத அளவிற்கு தான் இவருடைய கதாபாத்திரம் இவருக்கு அமைந்திருக்கிறது.

Also read: காமெடி டிராக்கை ஓட்டி வந்த ரஜினியின் 5 படங்கள்.. ரெண்டு பொண்டாட்டி இடம் மாட்டி தவித்த வீரா

- Advertisement -spot_img

Trending News