திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எம்ஜிஆரை பற்றி யாரும் அறியாத 5 விஷயம்.. கண்ணீர் விட்டதும், ராமாபுரம் வீட்டில் வெளுத்து கட்டியதும்

மக்கள் மத்தியில் ஒரு கடவுளை போல எம்ஜிஆர் இன்றுவரை பார்க்கப்படுகிறார். பேரறிஞர் அண்ணா வழியில் செல்ல ஆசைப்பட்ட எம்ஜிஆர் அதிமுக கட்சியை ஆரம்பித்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகாலம் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சி செய்தார். இந்த 13 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது. இந்த விஷயங்களை எல்லாம் அனைவரும் அறிந்ததே. அவரைப் பற்றி அறியாத 5 விஷயங்களை இதில் பார்க்கலாம்,

சிலம்பாட்டம்: எம்ஜிஆர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது வால்டாக்ஸ் ரோட்டில் குடியிருந்தார். அப்போது கொத்தாளத்சாவடியில் ஒரு கைதேர்ந்த சிலம்பு மாஸ்டரிடம் உண்மையாக சிலம்பம் கற்றுக் கொண்டார்.

Also Read: எம்.ஜி.ஆருடன் கிசுகிசுவுக்கு இதுதான் காரணமா.?

வாள்வீச்சு: சினிமாவில் சில விஷயங்கள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக எம்ஜிஆர் வாள்வீச்சும் கற்றுக் கொண்டார். இதற்காக ஆங்கில படங்களை தன்னுடைய ராமாபுரம் வீட்டில் தினமும் போட்டு பார்த்து பயிற்சி எடுத்துக் கொண்டார். இவருக்கு இணையாக வாள் வீச்சு சண்டை போடும் திறமை கொண்டவர் தான் எம் என் நம்பியார்.

முதல் முதலில் கண்ணீர் விட்ட எம்ஜிஆர்: 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜர், விருதுநகரில் தோல்வியுற்றதை அறிந்த எம்ஜிஆர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதேபோல் கக்கன், தோல்வியும் அவரை கண்கலங்க செய்தது.

Also Read: கோபத்தை மறந்து எம்ஜிஆர் செய்த பேருதவி

20 லட்சம் தொண்டர்கள்: 1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதன்முதலாக அரியாசனம் ஏறுகையில் அவரை வரவேற்க 20 லட்சம் தொண்டர்கள் கூடியிருந்தார்கள். இதுவரை அப்படி ஒரு கூட்டத்தை தமிழ்நாடு மட்டுமின்றி உலகமே பார்த்ததில்லை.

தப்பானவர்களை துவம்சம் செய்யும் ராமாபுரம் வீடு: ஏதாவது குற்ற செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறை உதவியுடன் ராமாபுரம் வீட்டிற்கு கூட்டி வந்து அடித்து துவம்சம் செய்து விடுவாராம் எம்ஜிஆர். அந்த காலத்தில் ராமாபுரம் வீட்டிற்கு செல்ல அனைவரும் பயந்து நடுங்குவார்களாம். அந்த வீடு ஒரு நீதிமன்றம் போல் செயல்பட்டதாம்.

Also Read: என்னப்பா இது எம்ஜிஆருக்கு வந்த சோதனை

Trending News