செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

பெயரே தெரியாமல் தமிழில் கலக்கிய 5 வில்லன்கள்.. நல்லி பரோட்டா கறியை விழுங்கிய விஜய் சேதுபதியின் சேட்டா

Villain Actors Are Without Knowing Their Names: ஹீரோக்கு எதிரான வில்லன் கேரக்டரில் நடித்தால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற முடியும் என்று நடிக்க விரும்பி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மத்தியில், பெயர் கூட தெரியாமல் முக்கிய வில்லன் நடிகர்களுக்கு துணை வில்லன் நடிகர் போல, கெத்தான தோற்றத்துடன் இருந்தும் மக்களிடம் பெயர் தெரியாத பிரபலமாக இருக்கும் சில வில்லன் நடிகர்களை பற்றிய பதிவு.

ஜான் விஜய் : தலைமகன் படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகமானவர் ஜான் விஜய். இவர் பெரும்பாலும் வில்லன் மற்றும் துணை நடிகர் கதாபாத்திரங்களில் அதிகம் தோன்றியவர். ஓரம் போ, ராவணன், தில்லாலங்கடி, கடைக்குட்டி சிங்கம், கோ, கலகலப்பு, கபாலி போன்ற பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். இவர் மலையாளம், தெலுங்கு ஹிந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் FM ரேடியோ நிகழ்ச்சி இயக்குனராகவும் H2O என்ற விளம்பர நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கின்றார். பெயர் கூட தெரியாது இவர் நடித்த பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

Also Read : கபாலி பிளாப்ன்னு யாரு சொன்னது? 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா, அவிழ்த்து விட்ட தயாரிப்பாளர்

மிலிந்த் சோமன் : மாடலிங் துறையில் பிரபலமான மிலிந்த் சோமன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்தவர். தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார் இவர். சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தில் கர்ணன் ஜேம்ஸ் ஆண்டர்சன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். 58 வயதான மிலிந்த் சோமன் தன் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத காதல் மன்னனாக திகழ்கின்றார்.

ஹரிஷ் பேரடி : மலையாள நடிகரான ஹரிஷ் பேரடி தொடக்கத்தில் நாடக கலைஞராக இருந்தவர். இவர் கிடாரி படத்தின் மூலம் தமிழ் படங்களின் நடிக்க துவங்கினார். கைதி, சுல்தான், மெர்சல், அங்கரன், கட்டாக்குஸ்தி போன்ற தமிழ் ஆக்ஷன் படங்களில் சிறிய துணை வில்லன் கதாபாத்திரங்களில் வந்து போவார். தனுஷின் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். விஜய் சேதுபதி, மாதவன் நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் நல்லி பரோட்டா கறி விழுங்கியவராக விஜய் சேதுபதி சேட்டா என்றால் நினைவுக்கு வருகின்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also Read : விஜய் சேதுபதியால் அந்தரத்தில் நிற்கும் விடுதலை 2.. கூலாக வெறுப்பேற்றிய வெற்றிமாறன்

தேவன் ஸ்ரீனிவாசன் : 1997 ஆண்டு மன்னவா படத்தின் மூலம் அறிமுகமானவர் தேவன் ஸ்ரீனிவாசன். உல்லாசம், தடையம், வீரபாண்டி கோட்டையிலே, நெஞ்சினிலே போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார். இவர் பாட்ஷா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததை யாராலும் மறக்க முடியாது. விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் படத்தில் விஜயகாந்த் நண்பனாக இருந்து பின்பு வில்லனாக மாறும் வித்யாசமான நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது. வானவில், ரிஷி, சிட்டிசன், ஷாஜகான், சிவகாசி போன்ற திரைப்படங்களில் தன் குணசித்திர நடிப்பாலும் மனதில் நின்றவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாஸின் சாகோ திரைப்படத்திலும் நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

ஷாஜி சன் : 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ஓநாய் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் பாடலாசிரியராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியவர். பின்பு மான் கராத்தே, துப்பறிவாளன், மாமனிதன் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் மினிஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Also Read : 53 வயது வரை சிங்கிளாகவே இருக்கும் விஜயகாந்த், ரஜினி பட நடிகை.. மாப்பிள்ளை தேடும் குடும்பம்

- Advertisement -spot_img

Trending News