வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அங்கீகாரம் கிடைக்காத 5 பெண் இசையமைப்பாளர்கள்.. தனுஷ் கூட்டணியில் வெற்றி கண்ட கண்ணழகா பாடல்

5 Female Music Composers: மென்மையான குரல் வளர்த்தால் எண்ணற்ற பாடல்களை பாடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றும், மேலும் ஆண் இசையமைப்பாளர்களுக்கு நிகராய் முயற்சித்து இன்று வரை தனக்கான அங்கீகாரத்தை பெறாத 5 பெண் இசையமைப்பாளர்களை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.

பானுமதி: ஹிந்தி, தமிழ், தெலுங்கு என சுமார் 118 பாடல்களுக்கு மேல் இசையமைத்தவர் பானுமதி. பழம்பெரும் நடிகை ஆன இவர், இசையிலும் தன் ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாய் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் வெற்றியை கண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக 1992ல் செம்பருத்தி படத்தில் செம்பருத்தி பூவு என்ற பாடலுக்கு இசையமைப்பை மேற்கொண்டு வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: காலையில் 8 மணிக்கு ரஜினிக்கு கம்பெனி கொடுத்த நடிகர்.. மப்பு ஏத்தி மறக்க வைத்த சூப்பர் ஸ்டார்

பவதாரணி: பாடகி ஆகவும், இசையமைப்பாளராகவும் இவர் மேற்கொண்டு எண்ணற்ற படங்கள் வெற்றியை கண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக தந்தை இளையராஜாவின் இசை அமைப்பில் பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்னும் பாடலை பாடி வெற்றி கண்டார். 2019ல் வெளியான மாயநதி படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு இசையமைத்தார் இருப்பினும் அவருக்கான வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிஹாசன்: பன்முகத் திறமை கொண்ட இவர் இசை ஆர்வம் கொண்டு பாடிய பாடல்கள் வெற்றியைக் கண்டிருக்கிறது. அவை தன் உன்னதமான குரல் வளத்தால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதிலும் குறிப்பாக 2009ல் வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் படத்தின் பாடலை தானே இசையமைப்பை மேற்கொண்டார். 3 படத்தில் இவர் பாடிய கண்ணழகா கால் அழகா பாடல் மாபெரும் ஹிட் கொடுத்தது.

Also Read: ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்குது இல்லையோ, தளபதி 68 உறுதி.. 2 பெரிய கையை வளைத்து போட்ட வெங்கட் பிரபு

ஏ ஆர் ரெய்ஹானா: 2002ல் வெளிவந்த சாக்லேட் படத்தில் மல்லே மல்லே பாடலை பாடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் பாடிய பல்லேலங்கா, பொன்னி நதி போன்ற பாடல்கள் ஹிட் அடித்தது. மேலும் இவர் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கடைசி பக்கம், ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல போன்ற படங்களில் பாடல்களை இசையமைத்துள்ளார்.

அனுராதா ஸ்ரீராம்: சுமார் 3500க்கு மேற்பட்ட பாடல்களை தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பாடி வெற்றி கண்டவர் அனுராதா ஸ்ரீராம். அதிலும் குறிப்பாக வெற்றிக்கொடி கட்டு என்னும் படத்தில் இவர் குரலில் இடம்பெற்ற கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்தது என்றே கூறலாம். அவ்வாறு பாடல்கள் மூலம் பிரபலமாக பேசப்பட்டாலும் தனக்கான அங்கீகாரத்தை பெறவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: ஆட்டம் கண்ட ஜெயிலர் வசூல்.. 13ஆவது நாள் முடிவில் மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

Trending News