வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

டான்ஸ் ஆடி, வயிறு குலுங்க சிரிக்க வைத்த 5 வில்லன்கள்.. காதல் தண்டபாணியை பார்த்து அலறிய மாஸ்டர்

தமிழ் சினிமாவில் வில்லனாக மிரட்டிய சில நடிகர்கள் மோசமாக டான்ஸ் ஆடி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளனர். இதில் சில ஹீரோக்களும் டான்ஸ் ஆட தெரியாமல் சொதப்பி உள்ளனர். அவ்வாறு மிக மோசமாக டான்ஸ் ஆடிய 5 நடிகர்களை தற்போது பார்க்கலாம்.

பெப்சி விஜயன் : பல மொழி படங்களில் நடித்து மிகவும் பரிச்சயமான நபர் பெப்சி விஜயன். இவர் பல படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தில் படத்தில் மது அருந்திவிட்டு நடனம் ஆடுவது போன்ற ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

pepsi-vijayan

Also Read : 5 வருடமாக கிட்னி பெயிலியர், என் வாழ்க்கையை காப்பற்றியவர்கள்… பொன்னம்பலத்தின் மறுபக்கம்

பொன்னம்பலம் : கொடூர வில்லனாக பல படங்களில் நடித்து அசத்தியவர் நடிகர் பொன்னம்பலம். தற்போது உடல்நிலை பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முத்து படத்தில் ஒரு பாடலில் நடனம் ஆடியிருப்பார்.

ponnambalam

ராஜ்கிரண் : ராஜ்கிரன் பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் நடனத்தில் அவருக்கு பெரிய ஈடுபாடு இல்லை. இதனால் அவரது படங்களில் பெண்களை வர்ணிக்கும் படியான பாடல்கள் தான் இடம்பெறும். இந்நிலையில் முனி படத்தில் ஒரு பாடலுக்கு ராஜ்கிரண் நடனம் ஆடியிருப்பார்.

rajkiran

Also Read : ராஜ்கிரண் கல்லாகட்டிய 5 திரைப்படங்கள்.. நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என அசத்திய 2 படங்கள்

பாலா சிங் : பாலா சிங் பல மொழி படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த அசத்தியுள்ளார். இவர் புதுப்பேட்டை படத்தில் தனுஷ் உடன் இணைந்த ஒரு பாடலில் ஆடியிருந்தார். இவருடைய இறப்பு தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய இழப்பை தந்தது.

balasingh
balasingh

காதல் தண்டபாணி : பரத், சந்தியா நடிப்பில் வெளியான காதல் படத்தில் ஹீரோயின் தந்தையாக நடித்த அசத்தியவர் தண்டபாணி. இவர் காமெடி, வில்லன் என அனைத்திலும் பட்டையை கிளப்ப கூடியவர். இவர் முனி படத்தில் ராஜ்கிரனுடன் இணைந்து ஒரு பாடலில் இரண்டு, மூன்று ஸ்டெப்புகள் போட்டிருந்தார். அதற்குள்ளாகவே நடன இயக்குனர் படாதபாடு பட்டுவிட்டார்.

kadhal-dhandapani

Also Read : காதல் படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா? சுல்தான் படத்தில் 100 பேரில் ஒருவராக வந்தவரை கவனித்தீர்களா!

Trending News