திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹீரோக்களை மறக்கடித்து ஸ்கோர் செய்த 5 வில்லன் கேரக்டர்கள்.. எல்லா புகழையும் தட்டிச் சென்ற சித்தார்த் அபிமன்யு

Best Villain Roles: பொதுவாக திரைப்படங்களில் ஹீரோக்கள் ஸ்கோர் செய்ய வேண்டும் என்றால் அதற்கு வில்லன் கேரக்டர் கட்டாயமாக இருக்க வேண்டும். ஆனால் அந்த ஹீரோக்களையே மறக்கடிக்க செய்யும் அளவுக்கு சில வில்லன் கதாபாத்திரங்களும் பெயரை தட்டிச் சென்று இருக்கின்றன. அப்படி ஹீரோக்களை ஓரம் கட்டி புகழ் பெற்ற ஐந்து வில்லன்களை பற்றி இங்கு காண்போம்.

தனி ஒருவன்-அரவிந்த்சாமி: ஜெயம் ராஜா இயக்கத்தில் அரவிந்த்சாமி, நயன்தாரா, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் அரவிந்த்சாமி சித்தார்த் அபிமன்யு என்ற கேரக்டரில் வில்லனாக தெறிக்க விட்டிருப்பார். அதிலும் ஹீரோ ஜெயம் ரவியை ஓவர் டேக் செய்யும் வகையில் இவர் செய்யும் வில்லத்தனங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Also read: ரஜினியை வெற்றி நாயகனாக மாற்றிய அண்ணாமலை.. படத்தில் கவனிக்கப்பட வேண்டிய இந்த 6 காட்சிகள்

மாஸ்டர்-விஜய் சேதுபதி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருப்பார். பவானி என்னும் கேரக்டரில் 18 வயதிற்கு கீழ் இருக்கும் சிறுவர்களை வைத்து இவர் செய்யும் அட்டகாசம் வேற லெவலில் இருக்கும். அந்த வகையில் விஜய்யை விட இவருடைய கேரக்டர் தான் பெரிய அளவில் பேசப்பட்டது.

ராட்சசன்- சரவணன்: ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. அதிலும் கிறிஸ்டோபர் என்ற கேரக்டரில் நடித்திருந்த சரவணன் ஒட்டுமொத்த பாராட்டுகளையும் தட்டி சென்றார். தான் காதலித்த பெண் தன்னை நிராகரித்ததாலும், அதனால் ஏற்பட்ட அவமானத்தாலும் இந்த கேரக்டர் வரிசையாக ஒவ்வொரு பெண்களையும் கடத்தி கொடூரமாக கொலை செய்யும் படி அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக சஸ்பென்ஸ் கலந்த திரில்லருடன் வெளியான இப்படம் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இருக்கிறது.

Also read: குடும்பங்கள் கொண்டாடிய விக்ரமனின் ஒரே படம்.. இன்று வரை உடைக்க முடியாத நம்பர் ஒன் வசூல் சாதனை

அருந்ததி-சோனு சூட்: அனுஷ்காவின் மிரட்டல் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி பெற்றது. அதிலும் அருந்ததியாக வரும் இவரின் நடிப்பு ரசிகர்களை கொள்ளை கொண்டது. ஆனால் அவரையே ஓரம் கட்டும் அளவுக்கு பசுபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சோனு சூட் பாராட்டுகளை பெற்றார்.

பெண் பித்தனாக வரும் இவர் அனுஷ்காவை பார்த்து பொம்மாயி என்றும் அடியே அருந்ததி என்றும் உச்சஸ்தானியில் கத்தும் போது நிச்சயம் ஒரு நடுக்கம் ஏற்படும். அப்படி ஒரு வெறித்தனமான நடிப்பை கொடுத்த இவர் ஹீரோயினை ஓரம் கட்டி கெத்து காட்டியது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்-சூர்யா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த வருடம் வெளியான இப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியது. அதிலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலின் நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்தது. ஆனால் அவரையே ஓரம் கட்டும் அளவுக்கு கடைசி சில நிமிடங்கள் மட்டுமே வந்த சூர்யா ஒட்டுமொத்த புகழையும் தட்டிச் சென்றார். அந்த வகையில் அவருடைய ரோலக்ஸ் கேரக்டர் இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Also read: மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய 5 பிரபலங்களின் விவாகரத்து.. சமந்தாவை விட ஷாக் கொடுத்த பிசின் நடிகை

Trending News